பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

செலவிடப்பட்டது. அதுவே தாமஸ் அவர்களின் வெற்றிக்குக் காரணம். ஆனால் இச் செலவு மிகவும் அதிகமானதாக அரசியலாரால் கருதப்பட்டது. இலாபகரமாக இல்லாத இத்தொழிலைக் கைவிட முடிவு செய்தனர். கி. பி. 1853-ஆம் ஆண்டு பான்புலிக்கு மேலே இருந்த ஒரு தோட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை ரூ. 9841- க்கு விற்றுவிட்டனர். அதுவும் சில ஆண்டுகளில் திருவாங்கூர் அரசியலாரின் கைக்கு மாறியது.

விற்கப்பட்ட தோட்டங்கள் மொத்தம் 19. அவற்றில் ஒன்பது தோட்டங்கள் காவற் காடுக (Reserved forests) ளாக மாற்றப்பட்டன. மீதியிருந்த 10 தோட்டங்களில் குறிப்பிடத்தக்கது 'அருவிக்கரைத்தோட்டம்.' இது நீர் வீழ்ச்சியின் உச்சிக்கருகில் அமைந்துள்ளது. இது சிவகிரி ஜமீன்தாரினிக்கு உரிமையுடையதாக இருந்தது. மீதி 9 தோட்டங்களும் குற்றாலத்திற்கு மேல் மூன்று கால் தொலைவில், சித்திரா நதி மேலே ஓடிவரும் பகுதியில் அமைந்துள்ளன. இவ்விடம் இரண்டு செங்குத்தான மலைத்தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ள குறுகிய பள்ளத்தாக்கில் உள்ளது. இத் தோட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 'பரதேசிப் புதை' என்னும் தோட்டமாகும். இத்தோட்டம், மற்ற எட்டுத் தோட்டங்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு பேரடைஸ் எஸ்டேட்' (Paradise Estate) என்ற பெயரோடு இப்போது விளங்குகிறது. இத்தோட்டத்தின் அருகில் ஒரு பெரிய குகை இருக்கிறது. இது இரண்டு பெரிய பாறைகளாலானது. 30 அடி ஆழமுடையது. தாழ்வான ஒரு பாறையின் மீது குடை கவித்தாற் போன்று மற்றொரு பாறை படிந்துள்ளது. அப்பாறையைக் கடந்து கதிரவன் ஒளியும், மழையும் கூட உள்ளே எட்டிப்பார்க்க முடியாது. இக்குகையின் வாயிலில் 15 எழுத்துக்களால் ஆன ஒரு கல்வெட்டுக் காணப்படுகிறது. ஆனால், அதன் பொருள் இது வரை