பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

(Plaster), ஓடுகள் (Tiles), செயற்கைக் கற்கள் (Artificial stones), பெரிய உலைகளின் தளங்கள் (boiler coverings) முதலியன செய்வதற்குச் சுண்ணாம்புக்கற்கள் பயன்படுகின்றன. உலோகங்களை உருக்க உயர்ந்த வெப்பநிலை தேவை. அந்த வெப்ப நிலையிலும் எரிந்து போகாதபடி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் முறையில் உலைகள் (Furnaces) அமைக்கப்படவேண்டும். அத்தகைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இந்த வெள்ளைக் கற்களினால் செய்த வெப்பச் செங்கற்க (Fire bricks) ளுக்கே உண்டு. ஆகையினால் தான் இவ் வெப்பச் செங்கற்களை மாபெரும் எஃகு உலைகளின் உட்தளங்களில் பதிக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் (1) கஞ்சமலை (2) கோதுமலை (3) சிங்காபுரம் (4) கொல்லி மலை (5) தீர்த்த மலை (6) கெத்தமலை (7) மல்லிக் கரை (8) பைத்தூர் மலை ஆகிய இடங்களில் இரும்புத்தாது நிறையப் புதைந்து கிடைக்கிறது. உருக்குவதற்கு நிலக்கரி இல்லாத காரணத்தாலேயே, இத்தாது பூமிக்கடியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி உபயோகத்துக்கு வந்தவுடன், இவ்விரும்புத்தாது தோண்டி எடுக்கப்படும். அவைகளை உருக்குவதற்கு அமைக்கப்படும் பேருலைகளுக்கு இவ் வெள்ளைக்கல் சிறந்த துணைப் பொருளாகப் பயன்படும்.

பாக்சைட் :

பாக்சைட் என்னும் கனிப் பொருள் சேர்வராயன் மலையில் அளவில்லாமல் கிடைக்கிறது. ஆனால் இதைத் தோண்டி எடுத்து விரிவான முறையில் ஆலைகள் நிறுவித் தொழிலைப் பெருக்க இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை. பாக்சைட்டிலிருந்து அலுமினியம் செய்யலாம். ஆனால் பாக்சைட்டை உருக்குவதற்கு உயர்ந்த மின்னாற்றல் தேவை. சேலம் மாவட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிகளை நல்லமுறையில் பயன்