பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
47

காஃபித் தோட்டங்களில் நிழல் தருவதற்கும், தழை உரம் அளிப்பதற்கும் வெள்ளோக்கு மரங்களை உடன் வளர்க்கத் தொடங்கினர். இது விரைவில் பருத்து நீண்டு வளரக் கூடியது. நட்டு நான்கைந்து ஆண்டுகளில் பெரு மரங்களாக வளர்ந்து விடும்.

உலகில் அதிகமாகப் பயிரிடக் கூடிய சிறந்த காஃபிப்பயிர் வகைகள் அரேபிகா (Arabica) ரோபஸ்டா (Robusta), லிபெரிகா (Liberica) என்பவையே. இவற்றில் மிகவும் சிறந்ததான அரேபிகாவே சேர்வராயன் மலைகளில் விளைகிறது. காஃபித் தோட்டங்களெல்லாம் பெரும்பாலும் லூப் பாதை (Loup Road) யிலேயே அமைந்துள்ளன. ஏர்க்காட்டிலிருந்து புறப்பட்டு, நாகலூர் வழியாகச் சென்று வெள்ளக் கடை வழியாக இப்பாதை மீண்டும் ஏர்க்காட்டை அடைகிறது. இதன் நீளம் 20 கல். ஐம்பதுக்கு மேற்பட்ட காஃபித் தோட்டங்கள் இப்பாதை செல்லும் வழியில் அமைந்திருக்கின்றன. இத் தோட்டங்களின் பரப்பு 10,000 ஏகர். ஓராண்டுக்கு 2000 டன் காஃபிக் கொட்டை சேர்வராயன் மலைமீது விளைகிறது. இக்கொட்டை இங்கிலாந்து, ஐரோப்பா, உருசியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


தேயிலையும் இரப்பரும் :

தேயிலைப் பயிரானது, கி. பி. 1850-ஆம் ஆண்டில் பிஷர் அவர்களால் பயிரிடப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. போதிய அளவு நல்ல பலனளிக்காததால் கைவிடப்பட்டது. 1881-ஆம் ஆண்டில் இரப்பரானது சேர்வராயன் மலையில் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது. ஆனால் 1898-இல் ஏ. ஜி. நிக்கல்சன் என்பவர் 3500 அடி உயரத்திலுள்ள ஆதார்ன் தோட்டத் (Hawthorm Estate) தில் பெருத்த அளவில் பயிரிடத் தொடங்கிய போதுதான் இரப்பர் பயிர்த் தொழில் எல்லோருடைய கவனத்தையும் கவரத் தொடங்கியது. 1903-இல்