பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் l I அக் கோட்டையை, வெற்றியல்லது தோல்விகான வில் வீரர் பலர் காத்துக் கிடப்பர். தகடுரைத் தலைநகராகக் கொண்டி நாடு, தள்ளாவிளேயுளும், தக்காரும் தாழ்விலாச் செல்வரும் மலியப்பெற்ற மாண்புடைய்து புலி முதலாம் அங் காட்டுக் கொடு விலங்குகள், பிற உயிர்களுக்கு ஊறு செய்வதில்லை யாதலின், புல்லுணவு வேண்டிக், கன்றுகள் பின் தொடர, காலேயில் காடுபுகும் பசுக்கூட்டம், மாலேவரக் க ண் டு ம் மனேபுகும் மனம் இலவாய், இரவிலும் அக் காட்டிலேயே இருந்துவிடும். களவு வாழ்க்கையைக் கனவிலும் கருதா மைக்கு ஏதுவாகிய வளமிகுதியால் அங்காட்டில் கள்வர் எவரும் இலராகவே, அந் நாட்டு உழவர், கெல்முதலாம் தம் விளைபொருள்களைக் களத்துமேட்டிற் காவல் இ ன் றி யே விட்டுவைப்பர். மேலும், வழிப்போவாரைக் கொள்ளே யிட்டு வயிறுவளர்க்கும் கொடியோரை அங் நாட்டில் காண் பது அரிதாகலின், வழிச் செல்வோர், இரவு வந்துற்றதும், காவல் மிகுந்த இடம் தேடியலேயாமல், தாம் விரு ம் பு ம் இடங்களில் இருந்து இளேப்பாறிச் செல்வர். 2தகடுர் நாட் டின் நடுவண் குதிரை என்னும் பெயருடையதொரு குன்று இருந்தது. எளிதில் ஏறியடையலாகாத் தன் உச்சியில், உண்டார் உயிரை நெடிது நாள் வாழவைக்கவல்ல கனியினே 1.'ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் - கனவினும் குறுகாக் கடியுடை வியன்நகர்' -புறம்: 390, "பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடுர்,” -பதிற்றுப்பத்து 78. 2."கன்றமர் ஆயம் கானத்து அல்கவும், . வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும், களமலி குப்பை காப்பில வைகவும், விளங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்.”புறம் :-280