பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிமகக்த் மற்வர் குலங்கள் 17 எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மை, நீதி கான்பதில் கிலேபிறழாமை, வருவது உணரவல்ல வால றிவு ஆகிய அரும் பெரும் பண்புகள் அத்தனையும் பெற்று, ஆடவரிற் சிறந்த நம்பியாகத் திகழ்ந்த நல்லியக் கோடன் என் பவன் பிறந்த குடி இவ்வோவியர் குடியே. கடைச்சங்க காலத்து எழுபெரும் வள்ளல்கள் மாண்டு மறைவுற்றபின் னர், அவர்தம் கொடைத்தொழில் அனைத்தையும் தான் ஒரு வளுகவே, தனித்து நின்று ஆற்றிய பெரியோனுகிய அக்கல்லி யக்கோடனே ஈன்றதால், ஓவியர்குடி, உயர்ந்தோர் உள் ளத்தே இடம்பெறும் பெருமையுடையதாயிற்று. அதியர் குடியில் வந்தவன் அதியமான் என்றும், அவன் காடு அதிய மானுடு என்றும் அழைக்கப் பெறுவதைப் போலவே, ஒவியர் குடியில் வந்தவன் ஒய்மான் என்றும், அவன் காடு ஒய்மானுடு என்றும் அழைக்கப் பெஅம். 4. கொங்கர்: கோவை மாவட்டமும், சேலம் மாவட்டத் துத் தென்பகுதியும் கொண்ட நிலப்பரப்பைத் தாங்கள் வாழிடமாகக் கொண்ட பழங்தமிழ் மரபினரே கொங்க ராவர். கொங்கர் வாழ்ந்திருந்தமையால், அந்நிலப் பகுதி கொங்கு காடு எனும் பெயர் பெற்றிருந்தது. அப்பெயரே இன்றும் கின்று நிலவுகிறது. கொங்களின் குலத்தொழில் ஆனிரை ஒம்புதலாம். கொங்காடு, நீர்வளம் அற்ற நாடாத லோடு நெடிய பலகுன்றுகள் கிறைந்த மேட்டு கிலமுமாத லின், கொங்கர், தமக்கும் தம் ஆனிரைக்கும் வேண்டிய உண் ணிர் பெறுவான் வேண்டி நாடெங்கும் எண்ணிலாக் கிணறு களைத் தோண்டி வைத்திருந்தனர். புல்லுணவு தேடிச் செல் லும் இடங்களிலும் தண்ணிர்க் தட்டுப்பாடு நேராமை குறித்து, ஆனிரைகள் செல்வதற்கு முன்பே அவ்விடங்கட் குச்சென்று, கணிச்சிப் படையால் திப்பொறி சிதறும் வண் ணம் கற்பாறைகளைப் பிளந்து கிணறுக்ளைத் தோண்டி வைப்பர். கெடிதாமும் உடையவாய்த் தோண்டிய அக்கிணறு