பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழகத்தில் கோசர் குரிய கொங்கு காட்டிலிருந்தே துரத்தவேண்டுமென்று எண்ணினன். உடனே கொங்கு நாட்டிற்கு அணித்தாக உள்ள மலை நாட்டை வாழிடமாகக் கொண்டு கொங்கரின் இயல்பெல்லாம் உணர்ந்திருந்தாளுகிய அதியன் என்ற படைத் தலைவனே அது புரியுமாறு பணித்து, அவனுக்குத் துணேயாக ஒரு பெரிய யானைப் படையையும் அனுப்பி வைத்தான். அப் பணி மேற்கொண்டு கொங்கு காடு புகுந்த அதியனும், கொங்கரை வென்று அவர்கட்குரிய நாட்டின் பெரும் பகுதியைப் பாண்டியர் உடைமையாக்கி மீண்டான்." இவ்வாறு தம்மையும் வென்று, தம் காட்டையும் கவர்ந்துகொண்ட பாண்டியன் படை முதலியாகிய அதியன்: பிறிதொரு காலத்தில் வாகை எனும் இடத்தில் நடைபெற்ற போரில் உயிர் இழந்தமை கேட்டு, கொங்கர் மட்டிலா மகிழ்ச்சி கொண்டனர். - ஆனிரை கவர்ந்து அழிவு பல புரியும் தம் வெட்சிப் போரை, கொங்கர் முடியுடை மூவேந்தர் நாடுகளில் மட்டும்ே நிகழ்த்தினரல்லர். அக்காலச் சிற்றரசர் நாடுகள் சிலவற்றி லும் அவர்கள். தம் ஆற்றலைக் காட்டத் தலைப்பட்டனர். அது பொருத ஆய் அண்டிரன் என்ற குறுகிலத் தலைவன் ஒருவனும் கொங்கரை எதிர்த்துப் போரிட்டான். அவைேடு போரிடமாட்டாது தோற்ற கொங்கர், வேற்படை முதலாம் தம் படைக்கலங்களேயும் களத்தில் போட்டுவிட்டு ஒடத் 1 கொங்கர் ஒட்டி நாடுபல தந்த பசும்பூண் பண்டியன்' அகம் : 253 2. கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினவல் அதியன் களிருடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே