பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 . தமிழகத்தில் கோசர் மையிலிருந்து வழிவந்தது. ஆதலின், கோசர், யூகி பிறந்த கோசாம்பி நகரத்தினின்றும் வந்தவராவர் என்பதும் பொருந்தாமை அறிக. வச்சக் தொள்ளாயிரம் என்ற பெயருடையதொரு தமிழ்நூல் உண்மையாலும், அந்நூலின் பல இடங்களில் பாட்டுடைத் தலைவன் "வச்சத்து இளங்கோ வத்தவர் கோன்' வச்சத்தார் மன்னவன்" எனக் கூறப்பட்டுள்ள மையாலும்.வத்ச நாட்டுக் கோசத்திலிருந்து இத்தென்னடு புக்குச் சீரும் சிறப்பும் பெற வாழ்ந்த வீரர் பலர் உண்டு எனக் கூறுமுகத்தான், கோசரைக் கோசாம்பி நகரத்தோடு தொடர்புபடுத்துவது பிறிதொருமுறை. வச்சத் தொள்ளாயிரம் மிகமிகப் பிற்பட்ட காலத்தது. அதில், வச்சத்தார், வத்தவர், என்பார் கூறப்பெறுதல் கொண்டு, பழங்தமிழ் இலக்கியங்கள் கூறும் கோசரை, வத்தவ நாட்டவராகக் கோடல் பொருந்தாது. - கங்கை கொண்டான் என வழங்கப்பெறும் முதலாம் இராசேந்திர சோழனும், முதலாம் குலோத்துங்கனும், வக்ஸ் காட்டைச் சேர்ந்த சக்கரக்கோட்டம் என்ற நகரை வென்றனர் என அன்னரின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வெற்றி கொண்ட நாடுகளின் பெயர்களையும், மன்னர்களின் பெயர்களையும், தம் பெயர்களோடோ, தம் தண்டத் தலை வர் பெயர்களோடோ இனத்துப் பெருமை கொள்வது பழந்தமிழ் அரசர்களின் வழக்கமாம். ஒரு நாட்டை வெற்றி கொண்ட படைத்தலைவனுக்கு அது குறிக்கும். பட்டப் பெயர் குட்டி அங்காட்டு ஆட்சி உரிமையை அளிப் பதும் அவர்கள் வழக்கமாம். முடிகொண்டான் என்ப. வனுக்கு வித்தராயன் என்ற பட்டப்பெயர் வழங்கி வக்ஸ், குத் தலைவனுக்கினன் முதலாம் குலோத்துங்கன் வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வகையால்வத்த