பக்கம்:தமிழக ஆட்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தமிழக ஆட்சி



பல்லவர் காலத்தில் சமண சமயத்தைத் தாக்கிப் பிரசாரம் செய்த திருநாவுக்கரசர் யானையால் கொல்ல விடப்பட்டார் ; விடம் கலந்த உணவு உண்ணுமாறு தூண்டப்பட்டார் ; நீற்றறையில் போடப்பட்டார் ; கல் லோடு கட்டிக் கடலில் எறிபட்டார். இவை பல்லவர்

காலத்துக் கொடுந்தண்டனைகள் என்னலாம்.

பிற்காலச் சோழர் ஆட்சியில், ‘ குற்றம் வன்மை வாய்ந்ததாயின், குற்றவாளி மரச்சட்டத்தில் கட்டப்படு வான்; 50 முதல் 100 அடி வரை தடிகொண்டு அடிக்கப்படு வான். கொடிய குற்றமாயின், யானையின் காலால் இடறப் பட்டுக் கொல்லப்படுவான்,’ என்று செள-ஜ-குவா என்ற சீன யாத்திரிகர் குறித்துள்ளார்.”

விசய நகர ஆட்சியில், திருடனுடைய ஒரு காலையும் கையையும் வெட்டிவிட்டனர். மிகப் பெரிய அளவில் திருட்டு நடத்திய குற்றவாளி தூக்கிலிடப்பட்டான். அரசத் துரோகம் செய்த பெருமக்கள் (வயிற்றின் வழியாக) கழு வேற்றப்பட்டனர் : கூர்மையான மரக்கழு செலுத்தப் பட்டுக் கொல்லப்பட்டனர். அரசத் துரோகம் செய்த சாதாரண மக்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டுக் கழுத்து வெட்டப்பட்டனர். அரசனேயே கொல்ல நினைத்த கொடியவர் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டனர். அவர் தம் குடும்பங்கள் நாட்டைவிட்டே விரட்டப்பட்டன. சில சமயங்களில் இறக்கும் நிலையில் குற்றவாளிகள் சித்திரவதை செய்யப்பட்டனர்.”

சங்க காலத்தில் குற்றவாளிகளே வைக்கச் சிறைச்சாலைகள் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் மணிமேகலையின் காலத்தில் சிறைக்கோட்டம் இருந்தது. அது அவள்

1. திருநாவுக்கரசர் புராணம், செ. 95-132 2. F. N. of S. India, p. 143 - 3. Sewell, A Forgotten Empire, p. 383–4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/101&oldid=573619" இலிருந்து மீள்விக்கப்பட்டது