உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழக ஆட்சி



வீரகங்கணமும் செய்து கொள்வர். இவை சங்க நூல்களில் காணப்பெறும் செய்திகள்.

வென்ற அரசன் போர்க்களத்தில் செய்யும் வேள்வி களவேள்வி எனப்படும். வென்ற அரசன் தோற்ற அரசன் மனைவியருடைய தலைமயிரைக் கயிருக்கி அதனைத் தன் தேரை இழுக்கப் பயன்படுத்துவதும் உண்டு. தோற்ற அரசனுடைய பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதிய வைத்தலும் உண்டு. வெற்றி பெற்ற மன்னருள் சிலர் இங்ஙனம் கீழ்த்தரமாக நடத்தலும் உண்டு. இவை பற்றிய விவரங்களைப் புறநானுாற்றிலும் பத்துப் பாட்டிலும் பதிற்றுப் பத்திலும் காணலாம்.

போர் வீரருட் சிலர் தமது தனிப்போர் முறையால் சிறப்புப் பெறுதலும் உண்டு. அத்தகைய வீரன் போரில் உயிர் விட்டால், அரசனும் பிறரும் அவன் நினைவாக வீரக்கல் நட்டு வழிபாடு செய்வர். வீரர் முகத்தில் அல்லது மார்பில் புண்பட்டால் வெட்கப்படுவர்; அவற்றைக் கிழித்து விரைவில் இறந்துபடுவர். இது மறக் காஞ்சி எனப்படும். போரில் இறந்துபட்ட வீரர் உடல்களைத் தழுவி அவர்தம் மனைவியர் போர்க்களத்திலேயே உயிர் விடுவர். ஒரு தாய் தன் ஒரே மகனைப் போர்க்கோலம் கொள்ளச் செய்து போருக்கு அனுப்பினள். அவளுடைய தந்தை, தமையன் மார், கணவன் ஆகியோர் முன்பு நடைபெற்ற போர்களில் இறந்தனர். இறுதிப் போரில் மகனும் இறந்தான். அவன் உடல் முழுவதும் அம்புகள் தைக்கப் பெற்றிருந்ததைக் கண்ட தாய் மகிழ்ச்சிக் கண்ணிர் விட்டாள்” என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகின்றது.”

போர்க்களத்தில் உயிர்விட்ட வீரனுக்காக அவன் குடும் பத்தாருக்கு நிலங்கள் வழங்குவது உண்டு. அங்ஙனம் வழங்

1. வாகைப்படலம், வெண்பா 22. 2. தொல். புறத்திணையியல், சூ. 79.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/121&oldid=573639" இலிருந்து மீள்விக்கப்பட்டது