பக்கம்:தமிழக ஆட்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழக ஆட்சி



சிற்றரசரும் படைகளும்

பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர்கள் பலர் இருந்தனர். ஒவ்வொரு சிற்றரசனிடமும் படைகள் இருந்தன. பேரர சனுக்குத் தேவைப்படும் பொழுது சிற்றரசர்கள் தங்கள் படைகளை உதவவேண்டும் என்பது விதி. ஆல்ை அப்படை வீரர் பண்பட்டவரல்லர். அவருட் பலர் போர்க்காலத்தில் மட்டும் வீரராக இருப்பர்; எஞ்சிய காலங்களில் பயிர்த் தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பர், இத் தகைய வீரரைக் கொண்ட படைகளால் சிறந்த முறையில் போர் செய்தல் இயலாததன்றோ தென்னிந்தியப்படை வீரர் போர்த்துறையில் குறையுடையவர் என்பதற்குரிய காரணங் களில் இது சிறப்பானதாகும்.

போர்க்காலங்களில் அவர்களை மகிழ்விக்க ஆடல் பாடல் மகளிர் உடன் செல்வர். அவர்களுடைய ஆடல் பாடல்கள் வீரர்க்கு மகிழ்ச்சியை ஊட்டினும், வேறு நினைவுகளையும் ஊட்டி வந்தன. எனவே, இம்முறையும் போர்த்திறமை பழுதடைவதற்கு மற்றாெரு காரணமாக அமைந்தது. - சிற்றரசர்கள் தம்முள் அடிக்கடி போர் புரிந்தனர், பேரர சனுக்கு அடங்காமலும் சில சமயங்களில் திரிந்தனர்; வலிமை யற்ற பேரரசன் ஆட்சியில் சிற்றரசர்கள் நாடு பெருக்குவதில் ஈடுபட்டனர். மூன்றாம் இராசராசன் ஆட்சியில் சிற்றரசர் தம் வலிமையைப் பெருக்கிக் கொண்டனர். சேந்தமங் கலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கன் தன் பேரரசனகிய மூன்றாம் இராசராசனையே சிறைப்படுத்தின்ை. சிற்றரசர்களைப் போலவே அவர்தம் படைத்தலைவர்களும் சில சமயங்களில் ஒற்றுமையின்றிப் பூசலிட்டுக்தொண்டனர். இத்தகைய பல க்ாரணங்களால் தமிழ்ப்படை வீரர் பிற்காலங்களில் வலிமை இழந்தனர்; அதனால் முஸ்லிம்கள் படையெடுத்த போது புறங்கொடுத்தனர். o r . முஸ்லிம் வீரர்கள் கட்டுப்பாடு உடையவர்கள்; சிறந்த முறையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள். அவர் தம் கட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/123&oldid=573641" இலிருந்து மீள்விக்கப்பட்டது