பக்கம்:தமிழக ஆட்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி

151



பாடலையும் வளர்க்க ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந் தனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் ஆடல் பாடல் மகளிர் நானுாற்றுவர் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வேலி நிலமும் ஒரு வீடும் வழங்கப்பட்டன. அனைவரையும் கோவிற் செல்வமே காத்து வந்தது.

எல்லாக் கோவில்களின் வரவு செலவுக் கணக்குகளும் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப் பட்டன. மதுராந்தகன் கண்டராதித்தன், காழி ஆதித்தன், அருமொழி மூவேந்த வேளார் முதலிய அரசாங்க அலுவலர் பலருடைய பெயர்கள் கல்வெட்டுக்களிற் காண்கின்றன, இந்த அதிகாரிகள் கோவில் கணப் பெருமக்கள், ஊரவையார் என்பவர் முன்னிலையில் கோவில் நகைகளைக் கணக்கிட்டு, மதிப்பிட்டுக் குறித்துக் கொண்டனர்; கோவில் கணக்கு களைப் பார்வையிட்டனர்; கோவில் பணத்தைக் கையாண் டவர்-சொன்னபடி கோவிலுக்கு நெல் முதலியவற்றைக் கொடுக்கத் தவறிய குத்தகையாளர் இவர்தம் நிலங்களைவீடுகளைப் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் ‘சிவத் துரோகிகள், ஊர்த்துரோகிகள்’ என்று ஏசப்பட்டனர்.”

இவை அனைத்தையும் நோக்க, அக்காலக் கோவில்கள், அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பொருளா தாரத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் பெரும்பங்கு கொண்டிருந்தன-ஊரின் உயிர் நாடியாக விளங்கின என்று கூறுதல் பொருத்தமாகும். -

இவற்றின் சீரழிவு “. . . . . . . பல்லவர் காலமுதல் சோழர்காலம் முடியக் கல்வெட்டுக் களில் குறிக்கப் பெற்ற இவ்வூராட்சி மன்றங்களும், கோவிலாட்சி மன்றங்களும் சோழராட்சிக்குப் பிறகு சீரழிந்து 1. 282 of 1906, I09 of 1914, 28 of 1819, 240 of 1931 etc.

3. 189 of 1929, 57 of 1914

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/158&oldid=573676" இலிருந்து மீள்விக்கப்பட்டது