பக்கம்:தமிழக ஆட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசுரிமை

17



தம் வாழ்வு கெடும். எனவே, கால்நடைகளைப் பாது காக்கவும், அவற்றால் வரும் வாழ்வைப் பாதுகாக்கவும் அவர் களுக்கு அரசு தேவைப்பட்டது. போருக்கு என்று ஒப்புக் கொண்டிருந்த தலைவனே நாளடைவில் அரசனானான். அவன் கோ, கோன் எனப்பெயர் பெற்றான்.[1] அம்மரபினர் இன்றும் கோன், கோனார் என்று அழைக்கப்படுதல் காணலாம்.

மருத நிலத்தில் விளைவு மிகுதி. அந்நிலம் இயற்கை வளம் நிறைந்தது; நீர் வளம் மிககது; செல்வம் கொழிக்கும் இடம் கல்விக்கும் கலை வளர்ச்சிக்கும் ஏற்றது; நாகரிகத்தின் பிறப்பிடம்; பண்பாட்டின் தோற்றுவாய். எனவே, மருத நிலத்திற்குப் பாதுகாப்புத் தேவையானது. பிற மூன்று நிலத்தாரும் மருத நில வளத்தைச் சூறையாடுதல் இயற்கை. ஆதலால் முல்லை நிலத்தைவிட மருத நிலத்திற்குப் பாதுகாப்பு மிகுதியாகத் தேவைப்பட்டது. எனவே, மருத நிலத்தில் நிலையான அரசு ஏற்பட்டது.

அரசு வளர்ச்சி

காலப்போக்கில் அரசனுக்கு இலக்கணம் வகுக்கம் பட்டது. கல்வி கற்றல், கற்றாேரை ஆதரித்தல், குடிகளைப் பாதுகாத்தல், தீயவரை ஒறுத்தல், வேள்வி செய்தல் என்பன அரசன் கடமைகளாகத் தொல்காப்பியம் கூறுகின்றது.

தமிழ்மறையாகிய திருக்குறள் அரசனுக்கு அமைச்சன். நாடு, கோட்டை, பண்டாரம், படை, நட்பரசர் என்ற ஆறும் இன்றியமையாதவை என்று வற்புறுத்துகிறது.


  1. P. T. சீநிவாச ஐயங்கார், இந்தியாவில் கற்காலம்,பக். 26.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/24&oldid=505216" இலிருந்து மீள்விக்கப்பட்டது