பக்கம்:தமிழக ஆட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழக ஆட்சி



அரசுத்தன்மை

தொன்று தொட்டு நாட்டில் நிலவிவரும் பழக்க வழக்கங் களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் அரசன் கட்டுப்படவேண்டி யவய்ை இருந்தான். அதனுல், அரசன் அரசாங்கத் தலைவ. ய்ை இருப்பினும், அவன் தன் விருப்பம்போல ஆட்சி நடத்த இயலவில்லை. வள்ளுவர் சொன்ன குடி, கூழ் முதலியவை இல்லாமல் தனிப்பட்ட முறையில் அரசன் சிறப்படைய வழி யில்லை.

தமிழகத்தில் சேர சோழ, பாண்டியர் என்ற மூவரும் முடிமன்னர். இவர்களது ஆட்சிக்கு உட்பட்டும் படாமலும் ஆங்காங்குச் சிற்றரசர் பலர் இருந்து வந்தனர். வீரம், அரசியலறிவு, சிறந்த ஒழுக்கம் முதலிய பண்புகளை உடைய அரசனுக்குப் பின் அவன் மரபினரே, அப்பண்புகளைப் பெற்று வருபவர்கள் என்ற நம்பிக்கையால் அரசுக்கு உரியவர் ஆயினர்.

அரசனுக்கு உதவியாக ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் இருந்தன என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அமைச்சர் முதல் குதிரைப் படைத் தலைவர் ஈருகப் பல துறைப் பெரு மக்கள் இந்த இரண்டு அவைகளிலும் பங்கு கொண்டிருந் தனர். மன்னன் இவர்களையும் அறக்களத்தந்தணர் முதலிய சான்றோரையும் கலந்தே ஆட்சி புரிந்தான். நாட்டுப் பெரு விழாக்களிலும் நாட்டுப் பெருஞ் செயல்களிலும் இக்குழு வினர் பங்குகொண்டனர்.

மன்னன் தவறு செய்யும்போது புலவர் பெருமக்கள் அவன் தவறுகளை எடுத்து விளக்கி அறிவுரை கூறுதல் வழக்கம். சங்க நூல்களில் இவ்வுண்மையை விளக்கும் சான்றுகள் பல உண்டு. கோவூர் கிழார், பரணர், கபிலர், பிசிராந்தையார் முதலிய புலவர் பெருமக்கள் அரசர்க்கு அறிவுறுத்திய சந்தர்ப்பங்கள் பலவாகும். மன்னன் பிறர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/27&oldid=505220" இலிருந்து மீள்விக்கப்பட்டது