சட்டம்-முறை-காவல்
87
ஒன்று நடந்தது. வீரபாண்டியதேவன் காலத்தில் செய்யப் பட்ட முடிவை நகரத்தார் ஒப்புக் கொள்ளவில்லே. இரண்டா வதாகவும் மூன்றாவதாகவும் .ெ ச ய் ய ப் ப ட் ட முடிவுகளே மாகேசுவரரும் தா ன த் தா ரு ம் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அரசாங்க அதிகாரிகளான உடையார் காலிங்கராயர், நரசிங்கதேவ முதலியார், திருமஞ்சன மாளிகையார், விசுவநாததேவர் என்பவர்கள் அவ்வழக்கை விசாரித்து முடிவு செய்தனர் என்று ஒரு கல்வெட்டுக் கூறு கின்றது.*
வழக்கை விசாரித்து முடிவு கூறுவோர் இடத்திற் கேற்பவும் வழக்கிற்கு ஏற்பவும் வேறுபட்டிருந்தனர். உடையார்குடிக் கோவில் வழக்குகளைத் தீர்க்க அக் கோவில் மாகேசுவரர், பல கோவில்களைச் சேர்ந்த அதி காரிகள், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த யாத்ரிகர், உடையார்குடியில் இருந்த கைக்கோள முதலிகள் முதலி யோர் நடுவராக இருந்தனர் என்று கல்வெட்டுக் கூறு கிறது.”
இத்தகைய வழக்கு முடிபுகளில் அமைதி பெருதவர், மண்டலத் தலைவனுக்கோ அ ல் ல து அரசனுக்கோ விண்ணப்பம் செய்துகொள்ளலாம். அவர்கள் தாமாகவே முடிவுகூற முடியாதபோது, நாட்டார் உதவியை நாடுவர். அவர்களாலும் முடியாதபோது, சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மகாசனங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய் வார்கள். விசயநகர ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த ஆரகளுர் சிவன்கோவில் வழக்கு ஒன்று மேற்சொல்லப்பட்ட முறை யி ல் தீர்த்து வைக்கப் பட்டது. ... r X
1. 380 of 1914; 69 of 1924; S. I. Polity, p. 214. 2. 570 of 1920; A. R. E. 1921, para 40. . 3. 413 of 1913; A. R. E. 1914, para 26.