உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர் (1745-1808)

சேதுபதி மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (1762-1795) எமனேசுவரம் என்ற ஊரைச்சேர்ந்த முஹம்மது மீர் ஜவ்வாதுப் புலவர் என்பவரைத் தம் அவைக்களப் புலவராக அமரச் செய்து பெருமைப் படுத்தினார். அத்துடன் சுவாத்தான், வண்ணவயல் ஆகிய இரண்டு ஊர்களின் வருவாய் முழுவதும் அவர் குடும்பத்துக்குக் கிடைக்கும் வண்ணம் சர்வ மானியமாக வழங்கினார்.

சேதுபதி மன்னரின் 7 வயது மகளுக்கு கடும் சுரம் கண்டு நோய் அதிகரித்தது. அரண்மனை வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் ஜவ்வாது புலவர் அவர்கள் இறையருட் துணையுடன் மன்னர் மகளை பெரிய வாழையிலையில் படுக்கச் செய்து சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மன் மீது ஐந்து பதிகங்கள் பாடி முடித்ததும் நோய் நீங்கிப் பூரண சுகம்பெற்றுக் குழந்தை எழ, மன்னர் மகிழ்ந்து சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரு கிராமங்களைப் புலவருக்கு வழங்கினார். அந்தப் பாடல்கள்தாம் ‘இராஜராஜேஸ்வரி அம்மன் பஞ்சரத்ன மாலை'யாகும்.

மற்றும் ஜவாதுப் புலவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள் மற்றும் ஏராளமான அறன்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார்.

சவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னர், அவர் தம் உயர் அதிகாரி கள், சேதுபதியின் யானை பற்றியும் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.

வணங்காமுடி மன்னர் என்று புகழ்பெற்ற சேதுபதி மன்னரை "நீர் ஒரு வணங்குமுடி மன்னரே” என ஜவ்வாதுப் புலவர் சிலேடையாக அரசவையில் பாடிய பாடல் இதோ:

“கிளையாளன் சேதுபதி ரகுநாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவியிடத்தும் தம்மீசரரிடத்து மன்றி வளையாத பொன்முடிசற்றே வளையு மகுடமன்னர் தளையாடிய கையில் காளாஞ்சி ஏத்தும் சமயத்துமே!”