உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

8 109

58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில்

பாண்டியர் கல்வெட்டுக்கள்

திருச்செந்தூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் 'சிறிய மெக்கா' என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை.

1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு

கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப' என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது.

ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்' என்ற தொடரும் காணப்படுகிறது.

கல்வெட்டு

பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப

மேதினி மாது நீதியில் புணர

....

மடந்தை சயப்புயத் திருப்ப

மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப மறைநெறி வளர மனுநெறி திகழ்தர அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப எழுகடல் பொழில்

வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப

6