உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

& 119

61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*

மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. 'சிவமயம்' என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது.

அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. 'வாரங்கல்' என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்' என்று குறிக்கிறது.

மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது.

மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார்.

பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார். (1573)

சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப் பட்டுள்ளது. இதன் காலம் 1574.

கல்வெட்டு

சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல