உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

பிறதிட்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன். ஈழமும் கொங்கு கம்பழமும் யாழ்ப்பாணப் பட்டணமும் கேசரி வேட்டை கொண்டருளிய ராச பரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் வெகுநீதி ராசபரிபாலகன் ராசாக்கள் தம்பிரான் கிஷ்ட்டணராயர் அவர்கள் காரியத்துக் கர்த்தராகிய விசுவநாதநாயக்கன் கிருஷ்ண நாயக்கன் வீரப்ப நாயக்கன் அய்யன் அவர்கள் ராச்சிய பரிபாலனம் பண்ணிச் செய்தருளாநின்ற சாலிவாகன சகாப்தம் 1495 மேல் செல்லாநின்ற பவ வருஷம் தை மாசம் 10 தேதி சுபயோக சுபகரணமம் கூடிய சுபதினத்தில் மதுரை நாட்டில் வைகை நதிக்கு வடகரையாகிய கோரி பாளையத்தில் ல்லி ஒருகோல் சுலுத்தான் பள்ளிவாசல் கோரிக்கு சோளிகுடி சாக்கிகுளம் வீவிகுளக் கண்ணானேம்பல் சிறுத்தூர் திருப்பாவை இந்த ஆறு கிராமமும் முன் கூன்பாண்டியராசா 14 ஆயிரம் தங்கத்துக்கு வாலை பிரமாணம் பண்ணிக் குடுத்து நடந்துவந்த படியினாலே யிதன் பிறகு றாசாக்களுக்கும் மஸ்கருக்கும் தகராறு வந்து நாம் நாயம் விசாரிக்கும்போது பாண்டியன் கோரிக்கு விலைப்பிரமாணம் பண்ணிக் குடுத்த அத்தாட்சி நியாயமானபடி யினாலே முன் நடந்தபடிக்கு நாமும் அபிமானிச்சுக் குடுத்தோம் எல்கை முன் பாண்டிய நாட்டின் கல்லு எல்கைப்படிக்கு இந்த ஆறு கிராமத்தில் சகல சமஸ்த ஆதாயமும் சுகமே என்னென்னைக்கும் சூரியப் பிரவேசம் உள்ளமட்டுக்கும் சுகமே அனுபவித்துக்

கொள்வார்களாக.

  • இஸ்லாமியக் கல்வெட்டுக்கள் - ஒரு கண்ணோட்டம், செ. இராசு, இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி கருத்தரங்கு மலர்.