உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64.

புலவர் செ. இராசு 125

லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை*

கர்நாடக நவாப் ஆலம்கான் சுலைமான் சாகிப் அவர்கள் ஆட்சியின்போது ஷேக் தாவூது சாகிப் என்பவர் கொத்தவால் என்னும் அதிகாரியாக இருந்தார். அப்போது திருநெல்வேலிப் பேராயத்தைச் சேர்ந்த 12 வணிகக் குழுவினர் மகமைப் பணம் வசூல் செய்து அதிகாரி லாலுகான் சாகிப் அவர்களின நலத்தின் பொருட்டு திருநெல்வேலிக் குறவன் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் தொடர்ந்து பூசை செய்ய 28.8.1751 அன்று முடிவு செய்து செப்பேட்டில் எழுதித் தந்தனர்.

தமிழில் எழுதப்பட்டுள்ள இச்செப்பேடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அலுவலகத்தில் இன்றும் உள்ளது.

  • Annual Report on Epigraphy (A) 48 of 1946