உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 > தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை*

இடம்

காலம்

செய்தி

-

-

-

ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரம் காவிரிக் கரையில் உள்ள சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவாயில் வலப்புறம் நடப்பட்டுள்ள குத்துக்கல்.

கி.பி. 12.6.1761

மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு மாவட்டப் பகுதி அவர் ஆட்சியில் இருந்தது. ஈரோடு கோட்டை அதிகாரியாக (தளவாய்) இருந்த ரங்கய்யநாத திம்மரசய்யன் என்பவர். அவரும் கோட்டையில் கந்தாசாரம், அட்டவணை, சேனபோகம், சேருவைகாரர் ஆக இருந்த ஏனைய நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை ஷேக் அலாவுதீன் தர்காவிற்கு வரும் அரதேசி பரதேசி பக்கிரிகளுக்கு நாள்தோறும் அன்னமிடவும், அவர்களுக்கு ஆடை கொடுக்கவும் காலிங்கராயன் பாச நன்செய் நிலத்தில் 4 மாநிலம் கொடையாகக் கொடுத்தனர்.

கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர், நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.

இந்தத் தர்மத்திற்கு இந்துவாக இருந்து தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும், தாயைச் சேர்ந்த பாவமும் பெறுவான். இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்காவில் பன்றியைக் குத்திக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும். தாயாரையும், மகளையும் சேர்ந்த பாவமும் வரும். பூமி ஆகாயம் கேடுகள் உண்டாக்கும். மக்கட்பேறு இல்லாமல் போகும்.

1761ஆம் ஆண்டு ஐதர்அலி முழு அதிகாரத்தைப் பெற்ற ஆண்டு, அவருடைய ஆணையில் இக்கொடை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் கல்வெட்டில் அதுபற்றிய குறிப்பு இல்லை.