உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 137

69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி *

அவ்வொன்றும் அவதானி தமிழொன்று வெகுமானி

அறிவொன்று சேதுபதிபால்

அணியொன்று வெகுமானி சோமசுந் தரகுருவின்

அருளொன்றும் அடிமைவெள்ளைக்

கவ்வொன்றும் அலைநாவல் நதியொன்று கோத்திரன்

கணியொன்று குவளைமார்பன் கதியொன்று சரவணப் பெருமாள் கவீசுரன்

கையொன்றும் எழுதும் ஒலை

தெவ்வென்று சமர்வென்று திகழ்மகம் மதுதம்பி

தீரானிதிர் கொண்டு காண்க

செழுஞ்சென்ன பட்டினம் அதிற்கேழு வோம்வழிச்

செலவுக்கு வேண்டுமதனால்

உவ்வொன்று யவ்வொன்று லவ்வொன்று டவ்வொன்று சவ்வென்று மவ்வொன்றுவவ்

வொன்றுரவ் வொன்றுசவ் வொன்றுகவ் வொன்றுனவ் வொன்றுவர விடல்வேண்டுமே!

  • "சீட்டுக்கவித் திரட்டு" - விசாகப் பெருமாள் அய்யர் பதிப்பித்தது.