உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்*

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின்பெயர் 'ராவுத்தனசாமி'. ஆண்குழந்தைகட்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகட்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்' என்று கூறுகிறார்கள். தங்கள் குல முதல்வருக்கு அவர் பேருதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குல தெய்வமாக வணங்குகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஈரோடு வட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் 'துலுக்கண கவுண்டர்' என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்.

நாமக்கல் வட்டம் திருச்செங்கோட்டில் இதே கண்ண குலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி கோயிலில் ‘பங்கடு சுல்தான்' அடக்கத் தலம் தலம் உள்ளது. உள்ளது. பங்கடு சுல்தானை இஸ்லாமியர்களும் வந்து தங்கள் சமய ஞானி என்று வணங்குகின்றனர். பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி என்பது.

கொங்கு வேளாளரில் கண்ண குலத்தாருக்கும் இஸ்லாமி யருக்கும் உள்ள மேற்கண்ட தொடர்புகள் மேலும் ஆய்வுக் குரியதாகும்.

  • ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43. 'கொங்குநாடு' (1934) தி.சு. முத்துசாமிக் கோனார், பக்கம் 90