உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு & 135

வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 20” என்ற குறிப்பால் நாகூர் தர்காவுக்குத் திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பி வந்தனர் என்பது போதரும்.*

ה

மக்கான்தார்களுக்கும் துனியாதார்களுக்கும் வேறுபாட்டு ணர்ச்சி யேற்படுவதுண்டு. அவர்கள் தம் வழக்கை அரசரிடம் முறையிடுவர். இத்தகைய வழக்கொன்று கூறும் ஆவணம் மோடிப்பலகணியில் உள்ளது. அல்லா ஊர்வலத்துக்கு அரண்மனையிலிருந்து எடுபிடிகளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாகூர் காதிர் சாயேப் தர்காவுக்கு நகரா வாத்தியம் செய்து அளிக்கப்பட்டது. அல்லாவைத் திருவிழா 9ஆம் நாளில் ஊர்வலம் செய்வதற்கு கி.பி. 1834ல் தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத்தந்தத்தேர் பெரியது, சிறியது, சங்கீதத்தேர் ஆக ஐந்து தேர்கள் வழங்கப் பெற்றன.* இங்ஙனம் அல்லாப் பண்டிகை காலத்தில் நன்கொடைகளும் தேர் முதலியனவும் அளித்து முகமதிய சமயத்தாரின் நன்மதிப்பையும் ஆதரவையும் மராட்டிய மன்னர் பெற்றிருந்தனர்.

இன்றும் இவ்வழக்கம் நடக்கிறது

  • நாகூர் சந்தனக் கூடு உரூஸ் திருவிழாவைக் குறிக்கிறது. விழாவின் பெருஞ்சிறப்பு இதன்மூலம் தெரிகிறது.

("தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்". கே.எம். வேங்கடராமையா. தமிழ்ப்பல்கலைக் கழகம். 1984. பக்கம் 208-210).