உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

கி.பி. 1785இல் திருப்பூந்துருத்தியில் 1963 குழி நிலமும், மரஞ்செடி கொடி வகைகளில் நிலம் 1/4 வேலி 31/4 மா ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாம் அளிக்கப்பட்டது.

சூல மங்கலத்தில் 2 3/4 வேலி நிலம் 700 சக்ரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்கா அமைக்கப்பட்டது. அதனைச் சர்க்கார் ஜப்தி செய்தனர். அங்கு 'தர்கா'வை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787இல் ஹஸன்னா ஃபக்கீர் வேண்டிக் கொண்டவண்ணம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அல்லாப் பண்டிக்கைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருதலுண்டு; அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பது ண்டு. அல்லாப் பண்டிகை நடத்தவும் நன்கொடை அளிப்பதுண்டு.

'அல்லாப் பண்டிகைக்கு பகீர்களுக்குக் கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவுசாயேப் ரூ 30; சைதம்பாயி சாகேப் ரூ 30; காமாட்சியம்மா பாயி சாகேப் ரூ 25; சுலக்ஷணபாயி அமணி ராஜேசாகேப் ரூ 10; சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10; ஆக

105

-

என்ற ஆவணக் குறிப்பால் அரசமாதேவியாரும் சமயப் பொறையுடையவர்களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர் எனத் தெரிய வருகிறது.

அப்தர்கானாவில் ஒரு அல்லா வைப்பதற்கு 'லாடு' வாங்கிய வகையில் ரூ 150 என்ற குறிப்பாலும் அல்லாப் பண்டிகைக்காக அப்தர்கானாவில் அல்லா வைக்கிற இடத்தில் 'ஹிந்துஸ்தானி சேவை செய்வதற்கு டக்காவின் ஜோடியொன்றைத் தயார் செய்ய'என்ற ஆவணக் குறிப்பாலும் அரண்மனையில் அப்தார்கானாவில் ஓரல்லா வைக்கப்பட்டிருந்தமை போதரும். இதில் முன்னது 1852க்கும் பின்னது 1825க்குமுரியது.

பின்னதில் “ஹிந்துஸ்தானி சேவை செய்தற்கு டக்காவின் ஜோடியொன்று” என்பது சிந்திக்கத்தகுவது. அல்லா வைக்கிற இடத்தில் இந்துஸ்தானி மொழியில் ஃபக்கீர் வழிபாடு செய்வர் என்றும், அப்பொழுது டக்கா எனும் இசைக்கருவி அடிக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது.

"1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு... கந்தூரி உற்சவத்துக்காகச் சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரத்தை