உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்

133

தஞ்சையில் படையில் பணியாற்றவும், யூனானி மருத்துவத் தின் பொருட்டும், வியாபாரத்திற்காகவும் பல இஸ்லாமியர் நிலையாக வாழ்ந்து வந்தனர். தஞ்சை வட்டாரத்தில் மட்டும் இஸ்லாமியர் பள்ளிவாசல் தர்காக்கள் 42 இருந்தன என்பர். அவைகட்கு நாயக்க, மராட்டிய மன்னர்கள் பலர் கொடை கொடுத்தனர். இன்றும் தஞ்சாவூர் படே உசேன் போன்றவை பல மராட்டிய மன்னர் குடும்ப நிர்வாகத்தில் உள்ளன.

பிரதாப சிங் 1739இல் அரசரானவர்; இவர் 1740இல் நாகூருக்குச் செல்கிறபொழுது வழியில் “வடயாரங்குடி”க்கு அருகில் “பாவாசாகேப்பின் தர்கா” மசூதி குளம் மண்டபம் இவை பற்றி விண்ணப்பம் அளிக்கப்பெற்றது. அதில் தீபாநகரப் பேட்டை சுங்கத்தினின்று ஒரு காசுவீதம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் இருந்தது. அரசர் “அங்ஙனமே தருக" என ஆணை பிறப்பித்தார்.

துளஜா ராஜா 1765இல் அரசரானார். இவர் கி.பி. 1776இல் மகம்மது ஸேக்குக்கு மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் "காகி தத்தின் மூட்டைகளின் குவியலுக்கு அருகில் 12 அடிக்கோலினால் 2 வேலி நிலம் இனாம் கொடுத்தார். (காகிதத் தொழிற்சாலையாக இருக்கலாம்)

கி.பி. 1776இல்துளஜாராஜா தங்கத்திலும் வெள்ளியிலும் ஆக 34 அல்லாக்களும், தங்கக் குடைகள் இரண்டும் செய்தார் என்றோர் ஆவணக் குறிப்பால் அறியப் பெறுகின்றோம்.

கி.பி. 1773இல் மல்லிம் சாஹேப் என்பார் கடைவீதியின் கோட்டையின் பக்கம் ஒரு மசூதி கட்டினார். அந்த மசூதியை நடத்துவதற்கும் ஃபக்கீர்களுக்கு உணவு அளிக்கவும்,

சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும், வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும், ஆக 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பெற்றன. அங்கு ஓர் ஊர் அமைத்து "முகமதுபுரம்” என்று பெயரிடப்பட்டது.