உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

ஓலை ஆவணங்கள்

1) பூலாங்கால் பள்ளிவாசல் கொடை

பூலாங்கால் கிராமத்து நிலத்தில் சில பகுதிகளையும் பூலாங்கால் பள்ளிவாசலுக்காகப் பிலவ வருடம் தை மாதம் 17ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத சேதுபதியும் வெகுதானிய வருடம் மாசி மாதம் 13ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் அளித்துள்ளனர் - 2 ஓலை.

2) அபிராமம் பள்ளி வாசல் கொடை

அபிராமம் பள்ளிவாசலுக்கு அபிராமம் ஊர் நிலம் மானியம். பள்ளிவாசல் திருவிளக்குக்கு முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை நிலம் வாங்கி விட்டது பிங்கள வருடம் ஆடி

8 தேதி.

3) நாரணமங்கலம் சுல்தான் மானியம்

இராசசிங்கமங்கலம் தாலுகா பொட்டக வயல் மாகாணத்தைச் சேர்ந்த நாரணமங்கலத்தில் சுல்தானுக்கு நில மானியம் குமார முத்து விசைய ரெகுநாத சேதுபதி விட்டது. சகம் 1702 சார்வரி வருடம் மாசி 24 தேதி - தாமிர சாசனம்.

4) தேரூர் தாலுகா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் கொடை

ஆலிம்ஷா பள்ளிவாசல் திருவிளக்கு பூசை நெய்வேத்தியம் சிலவுக்காக தேவதானம் புல்லுக்குடி கயிலாதநாதசுவாமி கிராமம் தண்டலக்குடியில் நிலம் சர்வ மானியம். ஊர்கள் ஆக்களூர் மாகாணத்தைச் சேர்ந்தது. இதற்கு நவாபு நாளையில் வாங்கிய பாலானாக் காகிதம் தஸ்தாவேசுகள் உண்டு. மதுரைக்கு ரிஜிஸ்டாரில் பதியும்படியாய் மேற்படி தாஸ்தாவேசுகளை அனுப்பி வைத்திருக்கிறதாக மேற்படி பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா சொன்னதாய் தேரூர் சேவுகன் பெருமான் வந்து சொன்னது.