உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 141

71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை*

சேலம் மாவட்டம், சேலம் வட்டம் அம்மாபாளையம் என்ற ஊரில் தெருவில் நடப்பட்டுள்ள ஒருகல் செப்பேட்டின் நகல் என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றுள்ளது. மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் காரியத்துக்குக் கர்த்தரான ஹைதர்அலி அவர்கள் கி.பி. 1759ஆம் ஆண்டு அம்மாபாளையத்திலுள்ள அகாவல்ல சாயபு தர்காவிற்கு அம்மாபாளையத்தையும், வேறு சில ஊர்களையும் தர்கா நிர்வாகச் செலவு, பராமரிப்புக்காகவும் தர்காவிற்கு வரும் ஃபக்கீர்களுக்கு அளிக்கவும் கொடையாகக் கொடுத்தார். இதற்குரிய பணம் மைசூர் அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட்டதாக இதில் எழுதப்பட்டுள்ளன.

கொடை கொடுக்கப்பட்ட பிரமாதி வருஷம் கி.பி. 1759. 176160 தான் ஹைதர்அலி அதிகாரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 1759ஆம் ஆண்டிலேயே தனியாகக் கொடை கொடுக்கும் உரிமையும் ஹைதர்அலி பெற்றிருந்தது ஹைதர்அலி வரலாற்றில் புதிய தகவலாகும். இதே ஆண்டு ஹைதர்அலி பெங்களூர் அருகில் உள்ள பிங்கிபுரம், சென்னபட்டணம் அருகில் உள்ள மோஹெஹள்ளி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களுக்கும் இதேபோல் ஃபக்கீர் தர்மமாகக் கொடைகள் கொடுத்துள்ளார்.

  • Annual Report on Epigraphy 155 of 1934 Epigraphia Carnatica Vol IX, 32,90