உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா*

சேலம் மாவட்டத்தில் சங்ககிரி மலையில் ஒரு கோட்டை உள்ளது. புதுக்கோட்டை வாசல் அருகே ஒரு குகை இருக்கிறது. இது பீர்கயப் என்ற முகமதிய சித்தர் இருந்த இடம் என்று கூறுகிறார்கள். (ஃகைப் என்றால் மறைவானவர் என்று பொருள்!) இக்குகையின் உள்ளே கல்மதம் என்ற மருந்து செய்யப் பயன்படும் ஒருவகைப் பொருள் கிடைக்கிறது. பழக்கமுள்ளவர்கள் உட்புகுந்து எடுக்கிறார்கள்.

இதற்கு ஐதர்அலி ஒரு கொடையளித்துள்ளார். “விசு வருஷம் வைகாசி மாதம் சுத்த திதிய ஸ்ரீமது சகலகுல சம்பன்னரான ரங்கய்யரவர்களுக்க அயிதரல்லிக்கான் பகதூரவர்கள் சலாம்.

இப்பவும் சங்ககிரியிலிருக்கும் பீர்கைபு சாஹேபு அவர் தர்காவுக்கு சங்ககிரியில் காடு 20 வள்ளம் வேம்பனேரி சமுத்திரத்தில் விரை வரி கண்டகம் இரண்டு கண்டகம் சகிதமாய் விவரித்து நாலு மூலைக்கும் சிலை பிரதிஷ்டை செய்வித்து மா சூம் சாயபு அவாலத்து செய்வித்து என்னென்னைக்கும் சர்வ மானியமாக ஆசந்திரார்க்கமாய் நடபித்துக் கொண்டு வரவும்”

இப்படிக்கு

(காசு மொகர் செய்யப்பட்டிருக்கிறது)

1 வள்ளம் - 4 ஏக்கர்

  • 'கொங்கு நாடு. தி.அ.முத்துசாமிக் கோனார். 1934 பக் 69.