உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

147

77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும் *

கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சிபுரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாம்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூந்தமல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோட்டை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர்.

  • Annual Report on Epigraphy (B) 303, 304 of 1939

Epigraphia Indo - Moslemica 1938, page 52.