உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 151

வாய்க்கால்கள் வெட்டி நிலங்களுக்குப் பாசனவசதி செய்து கொடுத்தான். புலித்தேவனையும், அவனது நண்பர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள முயன்றான்” என்று “கான்சாகிபு சண்டை” என்ற தம் நூல் பதிப்பில் குறிப்பிடுகின்றார் (பக்கம் 11). 'கான்சாகிபு சண்டை’கதைப்பாட்டும்,

“வருகையிலே கும்தான் என்று வந்தான் - அந்த மதுரைக்கு வந்தபின்பு ராசாவுமானான்

என்று கூறுகிறது (பக்கம் 26).

எனவே நவாபு முகம்மது அலியே கான்சாகிபுவை பதவி யிலிருந்து அகற்றத் தானே படைக்குத் தலைமை தாங்கி வந்தார். கும்பினியார் பெரும் படையும் கர்னல் மன்சார் தலைமையில் வந்தது. போரில் வெல்ல முடியாமல் சிவகங்கைத் தளவாய் தாண்டவராயன் மூலம் சதியில் ஈடுபட்டனர். கான்சாகிபுவின் அலுவலர்கள் சீனிவாசராவ், மார்க்கசந்து (டச்சுக்காரர்), மெய்க்காவல் படைத்தலைவன் சேகுகான் மூவரும் பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கான்சாகிபுவைக் காட்டிக் கொடுத்தனர். பிடித்த அன்றே 14.10.1764ல்தூக்கிலிட்டனர். மாவீரனின் உடலை நான்காக வெட்டி நான்கு இடங்களில் அடக்கம் செய்தனர்.

'கான்சாகிபு சண்டை’கதைப்பாடல் நான்கு இடங்கள் என்று கூறி நத்தம், திண்டுக்கல் ஆகிய இடங்களைச் சுட்டிக் கூறுகின்றன. மதுரைக்கு அண்மையில் சம்மட்டி வரத்தில் 'கான்சாகிபு தர்கா’ உள்ளது. அதனை ஹிஜ்ரி 1222ல் (கி.பி. 1807) ஷேகு அதால் மகன் ஷேக் இமாம் என்பவர் கட்டியுள்ளார். இதைக் குறிக்கும் கல்வெட்டு தர்கா முன்புறச் சுவரில் பதிக்கப்பட்ட பலகைக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பெர்ஷியன் மொழியில் பாடல் வடிவிலும், தமிழிலும் கல்வெட்டு உள்ளது. தமிழில் பிரபவ, தை 23ஆம் தேதி என்று குறிக்கப்பட்டுள்ளது. 'பள்ளிவாசல்' என்றும் தமிழிலில்

எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1.

2.

3.

பிரபவ வருஷம் தை மாசம் 23 தேதி ரா.ரா. கானுச ாயபு பள்ளிவாசல் சேகு அதால் குமா

ரன் சேகு யிமாமு கட்டி வைய்த்தது

  • Annual Report on Epigraphy (B) 306 of 1960 * Annual Report on Epigraphy (D) 171 of 1960