உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 169

சு

87. கல்வெட்டில் ஏழு தலைமுறை

காயல்பட்டினம் பெரிய பள்ளியில் உள்ள இரு நல்லடக்கக் கல்வெட்டுக்களில் இறந்தவருடைய ஏழு தலைமுறை முன்னோர்களைக் குறித்திருப்பது மிக அரிய நிகழ்ச்சியாகும். வேறு எங்கும் இவ்வளவு தலைமுறைப் பெயர்கள் கூறப்படவில்லை. 21.5. 1581 அன்று காலமான இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினாவின் முன்னோர் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டள்ளனர்.

அசன் நயினா இசுபு நயினா

ஓசு நயினா

சமால் நயினா

சையது அகமது நயினா

ஷேக் அப்துல்லா நயினா சையது அகமது நயினா

இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினா (21.5.1581 மறைவு)

அதே அன்று காலமான மௌலானா அப்து ஜபாரின் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பெறுகின்றனர்.

ஹஸானுதீன்

அசன் நயினா

யூசூப்

ஜமாலுதீன்

சையது அகமது

ஷா அப்துல்லா

சையது அகமது

மெளலானா அப்துல் ஜாபர் (மறைவு 21.5.1581)

ARE 102, 103 of 1948