உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 8 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

88. இணையற்ற இரு பதக்கங்கள்

கோட்டைக்காட்டுப் பதக்கம்

புதுக்கோட்டை

மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோட்டைக்காடு என்னும் ஊரில் வயலில் எஸ். நாகராசன் என்ற மாணவர் கண்டெடுத்த பஞ்சலோகத்தால் ஆன பதக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 4.6 செ.மீ விட்டமுடைய வட்ட வடிவில் அப்பதக்கம் அமைந்துள்ளது. அதன் எடை 30 கிராம் ஆகும். பதக்கத்தின் முன்பக்கத் தலைப்பில் நடுநாயகமாக அல்லா என்று எழுதப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் முகமது’ என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் அழகிய கைப்பிடியுடன் வாள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்வாளுக்கு மேல் ‘ஸுல்ஃபிகார்' என எழுதப்பட்டுள்ளது. அந்த வாள் நபிகள் நாயகம் தன் மருமகன் அலி அவர்கட்குக் கொடுத்த வாளாகும். வாளின் அடிப்பகுதியில் ‘யாசின்' என எழுதப்பட்டுள்ளது:

கீழ்ப்பகுதி விளிம்பு ஓரம் முதல் கலிபாக்கள் நால்வர் பெயர் வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் அபுபக்கர் (கி.பி 632-634), உமர் (634-644), உதுமான் (644-655), அலி (655-663) என்பனவாகும்.

பதக்கத்தின் பின் பக்கம் தலைப்பில் இருபுறமும் முகமது என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் மொட்டைத் தலையுடனும், கோவணம் அணிந்தும் இரு கைகளிலும் கூர்மையான ஈட்டி ஏந்திய நிலையில் துறவி ஒருவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தண்ணீரின் மேல் நிற்பதுபோலக் காட்ப்பட்டுள்ளது. வேலனின் இருபுறமும் யாசின் என்று எழுதப்பட்டுள்ளது. துறவியின் கால்களுக்கும் கீழே 154 என்று அரபு எண் பொறிக்கப்பட்டுள்ளது.

‘அல்லா' என்ற புனிதச்சொல் ஒரு முறையும் முகமது என்ற சொல் நான்கு முறையும், யாசின் என்ற சொல் மூன்று முறையும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 771ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இப்பதக்கம் கருதப்படுகிறது. இசுலாம் மார்க்கத்தின் புனிதச் சொற்கள் பொறிக்கப்பட்ட இப்பதக்கம் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.