உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

8 171

அரேபியர் கடல் பயணப் பதக்கம்

(பத்திரிகைச் செய்திகள்)

திருச்செங்கோடு நாணயவியல் ஆர்வலர் எம்.விஜயகுமார், 777 ஆண்டுகட்கு முற்பட்ட மிக அரிய இசுலாமிய வெள்ளிப்பதக்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். (அப்பதக்கத்தை ஈரோடு புலவர் செ. இராசு, இசுலாமிய ஆய்வறிஞர் கு.ஜமால் முகமது ஆகியோர் ஆய்வு செய்தனர்)

தூய வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அப்பதக்கம் 4.5 செண்டி மீட்டர் விட்டம் உள்ள வட்ட வடிவில் அமைந்துள்ளது. அதன் முதல் பக்க மையத்தில் மெக்கா நகரில் முதலில் இறைவனுக்காக அமைக்கப்பட்ட ஆலயமான 'கஃபத்துல்லா’ அழகிய முறையில் பொறிக்கப்பட்டுள்ளது. (அப்புனிதத் தலத்தைக் கண்டு வழிபடத்தான் உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடுகிறார்கள்) ஆலயத்தின் மேல் பகுதியிலும் பதக்கத்தைச் சுற்றிலும் ‘யாசின்' என்ற புனிதச் சொல் ஒன்பது முறை அரபு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அச்சொல் புனிதக் குரானின் முப்பத்தாறாவது அத்தியாயத்தின் தலைப்பும், முதற்சொல்லுமாகும். அச்சொல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவர் எனவும், நபிகள் நாயகத்தையும் குறிக்கும். புனிதக் குரானின் இதயம் என்று அப்பகுதியினைக் கூறுவர். ஒன்பது முறை அச்சொல் எழுதப்பட்டிருப்பது ஒன்பது கோள்களைக் குறிப்பதாக இருக்கலாம்.

பதக்கத்தின் மறுபக்கத்தில் கடலில் செல்லும் படகில் இரண்டு பக்தர்கள் (சூஃபிகள்) போலத் தோற்றமளிக்கும் இருவர் கையில் நீண்ட கோல் தாங்கி நிற்கின்றனர். தாடியுடனும், நீண்ட சடைமுடியுடனும் அவர்கள் காணப்படுகின்றனர். முழங்கால் வரை உடை காணப்படுகிறது. படகின் கீழ் 651 என்று அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது ஹிஜ்ரி ஆண்டு ஆகும். அதற்கு நேரான கி.பி. ஆண்டு 1230 ஆகும்.

கி.பி.13,14 நூற்றாண்டுகளில்தான் ஏராளமான அரபு, பாரசீக நாட்டுப்பயணிகள் தமிழகம் வந்த தாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் விரிவான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியுள்ளனர். இரண்டாம் பக்கம் உள்ள உருவம் அப்பயணிகள் யாரேனும் இருவரைக் குறிப்பதாக இருக்கலாம்.