உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 175

தொழுகை என்பது ஐந்துவேளை என்று வரையறுக்கப் பட்டுள்ளது.

1) பஜ்ரு - அதிகாலைத் தொழுகை, கிழக்கு வானம் வெளுத்து சூரியன் உதயமாகுமுன் தொழுவது.

2) லுஹர் - மதியத் தொழுகை. சூரியன் உச்சியிலிருந்து சற்று நகர்ந்தபின் தொழுவது.

3) அஸற் - மாலைத் தொழுகை. சூரியன் மறைவதற்கு முன் தொழுவது.

4) மஃரிப் - சூரியன் மறைந்தவுடன் தொழுவது.

5) இஷா - இரவுத் தொழுகை. சூரியன் மறைந்து 70 நிமிடம் கழித்து கிழக்கு வெளுக்கு முன் தொழுவது.

ஐவகைத் தொழுகை அசற் - மாலைத் தொழுகை எப்பொழுது தொழுவது என காயல்பட்டினத்தில் சிலர் வினவியிருக்கக்கூடும். அசற் நேரத்தை அறிவிக்க இந்த சூரியக் கடிகாரம் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரிய ஒளியால் ஏற்படும் நிழல் எந்த அடியைத் தொடுகிறதோ அது அந்தமாதத் தொழுகை நேரம் ஆகும். இது ஒரு அபூர்வமான அறிவியல் குறிப்பாகும்.