உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

புலவர் செ. இராசு 177

89. பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு

ஐதர் அலி அவர்களின் தங்கை அசரது பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாராக இருந்தார். அவர் மனைவியும் ஐதர்அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி (கி.பி. 1772) குழந்த பிறந்து ஏழாம் நாள்

காலமானார்.

மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல்கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் மானியமாக விட்டு அதைக் கவனிக்க ஒன்பது பேரையும் நியமித்தார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

பள்ளிவாசல் உள்ள இடத்தில் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் நடந்ததென்று கூறப்படுகிறது.

இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசலையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார்.

அதன் மூல ஆவணம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021; ஆர். 8275 ஆகும். அதன் நகல் இங்கு தரப்படுகிறது. அதன் அழகை நோக்கும்போது “திண்டுக்கல்லில் ஒரு குட்டித் தாஜ்மகால்” என்றே அழைக்கத் தோன்றுகிறது. அங்கு சில கல்வெட்டுக்களும் உள்ளன. மூல ஆவணம்

திண்டுக்கல் வகையரா தாடிக்கொம்பு துக்குடிக்குச் சேகரம் பேகம்பூரில் இருக்கும் மொகபரா பள்ளிவாசலுடைய வரலாறு.

ஹசரது நவாபு அயிதர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொரைத்தனம் செய்யும் நாளையில் தம்முடைய மச்சினன் ராஜராஜஸ்ரீ நவாபு மீறா றசாலிகான் சாயபு அவர்களுக்குத் திண்டுக்கல் சீமை ஜாகீராக