உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

விட்டுக்குடுத்து மேற்படி திண்டுக்கல் சீமையை நவாபு மீறா றசாலிகான் சாயயு துரைத்தனம் செய்யும்போது மேற்படியார் பெண்சாதி ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கள் நந்தன வருஷம் ஆனி மாதம் 13 தேதியில் குழந்தை பிறந்து ஏழாம்நாள் இறந்து போனார். அதின் பிறகு பேகம் சாயபு அவர்களை அடக்கம் செய்து பள்ளிவாசலுங் கட்டி கோரியும் கட்டிவச்சு தாருகா முதலிய எங்கள் ஒன்பது பேரையும் நேமுகம் செய்து சர்வமானியமாக காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னப்பள்ளப்பட்டி யிந்த நாலுவகையும் நஞ்சை புஞ்சையுள்பட விட்டது.

விட்டு உங்கள் வமுச பரம்பரையான மாமூலாயி இவ்வகை கிராமங்களும், தோப்பும், குளமும் நீங்களே அனுபவிச்சுக் கொண்டு பேகம் சாயபுவை அடக்கம் பண்ணப்பட்ட முகபரா பள்ளிவாசலில் பணிவிடை செய்து கொண்டு யிருக்கக்கடவதென்று கட்டளையிட்டார்கள். அந்த நாள் முதல் நாங்கள் தலைமுறை தலைமுறையாய் அனுபவிச்சுக் கொண்டு வருகிறோம். முன்னாலே பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடத்தில் மும்பில் தண்ணீர் விட்டு விளக்கு எரிந்ததென்று சொல்லுகிறார்கள்.

மக்பரா என்கிற பேகம் சாஹிபாவை அடக்கம் பண்ணின இடம் பத்து மாருக்கப் பத்துமார் கொண்டு கட்டியிருக்கிறது. அந்தக் கட்டுப் பேரில் இரண்டு மார் கொண்டு விட்டு நடுவே கமான் வளைவதாக வேலை தீர்த்து நாலுக்குக் கல்லு நாலு சின்ன கலசங்களும் நடுவே பெரிய பொன் கலசமும் வைக்கப்பட்ட இடமும் உண்டாக்கி அதன் சுத்திலே பிரதட்சணம் பண்ணும் தாவாரம்போலே கட்டி அதில் வாசல்கள் வச்சு மொகலாயி வேலையாக வெள்ளைக்காரை பூசி வெள்ளை கமூனாக வேலை செய்து இருக்கிற பிரகாசமான இடமும் உள்ளதற்குத் தினமும் பக்கிரிகள் வழிப்போக்கர் வருகுற பேர்களுக்கு சோறுகள் குடுக்கறதும் உண்டு.

மேலெழுதிய மக்பராவின் இடத்துக்கு மேற்கு யிதுகாவென்று ஒரு இடமும் சவரட்சனையாக ஆறு கமான் குண்டுபோலே வைக்கப்பட்டு மொகலாயிதராக ஆறு குண்டு மேலே வைத்து ஆறுவாசல் போலேயும் நடுவிலே அவர்கள் வேதம் படிக்கப்பட்ட மேடை போட்டு யிருக்கிற இடம் பேகம்பூர் மெகற்பாவென்று பிரபலமாக பெரிய தோட்டமும் அந்த பேகம் சாஹிபா சமாதிக்குச்