உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

97. அஞ்சு வண்ணம்

கேரள மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள பல கல்வெட்டுக்களில் (ராமந்நதளி, தலக்காடு, கொடும்பாளூர், உறையூர், சீனிவாசநல்லூர்) ‘அஞ்சுவண்ணம்' என்ற மிகப்பெரிய கடல்வணிகக் குழுவின் பெயர் காணப்படுகிறது. கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் அவ்வணிகக் குழுவின் பெயர் பற்றி வி.வெங்கய்யா, டி.ஏ. கோபிநாதராவ், டி.சி.சர்க்கார், டி.வி. மகாலிங்கம், கே.வி. ரமேஷ், எ. சுப்பராயலு ஆகிய பல வரலாற்றுப் பேராசிரியர்கள் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளனர். பலர் பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ளனர்.

66

டி.சி. சர்க்கார் அலி, முகம்மது என்ற சொற்கள் அஞ்சுவண்ணம் வணிகக் குழுக் கல்வெட்டில் காணப்படுவதையும், கே.வி. ரமேஷ் ‘உமர்' என்ற சொல் வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். பலரும் ‘அஞ்சுமன்’ என்ற பாரசீகச் சொல்லுடன் ‘அஞ்சுவண்ணம்” என்பதை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

6

'களவியல் காரிகை' என்ற நூல் உரையில் பல்சந்தமாலை என்ற நூலில் வரும் சில பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. “இயவன ரான் கலுபதி தாமுதல் எண்ணவந்தார்

அயன்மிகு தானனயர் அஞ்சுவண்ணத்தில் அஞ்சல் என்னா

“யவனர்கள்

அல்லா எவைந்து சந்தியுத்தார் வகைதொழும்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரும் நாட்டகமே'

என்பன அவற்றில் வரும் தொடர்கள். யவனர்-யோனகர் - சோனகர் என மாறியதாக எ. சுப்பராயலு அவர்கள் ஆய்ந்து நிறுவியுள்ளார். 'கலுபதி' என்ற சொல் 'கலீஃபா' என்பதன் தமிழ் வடிவாகும். இரண்டாம் பாடலில் அஞ்சுவண்ணத்தார் ‘அல்லா’ என வந்து வணங்குவது கூறப்படுகிறது.

தஞ்சாவூர் சரசுவதி மகால் சுவடியில் கிடைத்தபாடல் ஒன்று நாகப்பட்டினத்தைப் பின்வருமாறு புகழ்ந்து பாடுகிறது: