உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 195

96. தினாரும் திரமமும்*

அரபு நாடுகளில் பயின்று வந்த நாணயங்களில் ‘தினார்”, ‘திரமம்’ என்ற இருவகை நாணயங்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்துள்ளது. அரேபியக் குதிரை வணிகர்கள் மூலம் அவை தமிழ்நாடு வந்திருக்கலாம்.

பாண்டியமன்னன் முதலாம் வரகுணன் காலத்தில் (768-811) கி.பி. 778ஆம் ஆண்டு அருகந்தூர்கிழார் மகள் மோசி கண்டன் சங்கரன் என்பானின் மனைவி மாறம்பட்டத்தாள் திருப்புத்தூர் திருத்தளிப் பெருமாழைகளுக்கு நந்தாவிளக்கு எரிக்க பத்துக் காசுகள் அளித்தார். இச்செய்தி வடமொழிப் பகுதியில் 10 தினார் என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பகுதியில் காசு என்று குறிக்கப் பெற்றிருப்பதால் செம்பொன்னால் உருவாக்கப்பட்ட 'தினார்' தமிழ்நாட்டில் வழக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதை அறிகிறோம். 'திரமம்' என்ற காசும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்துள்ளது."

2

‘திர்ஹம்’என்ற சொல்லே தமிழில் 'திரமம்' என வழங்கியது.

  • 1) Damilica Il part 3; "Fresh light on Arab trade with South Indina.

“S.I.I. Vol XIV No. 9; ARE 136 of 1908.

2)T.A.S. VolIV No 30; Tamil lexicon, suppliment P.310