உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

95. பந்தரும் ஃபர்கானாவும்*

தஞ்சை மராட்டியர் காலக் கல்வெட்டுக்களில் முகம்மது பந்தர், நாகூர் பந்தர், நாகூர் ஃபர்கானா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. ‘பந்தர்’ என்பது பொருளைக் குவித்து விற்கும் இடத்தையும் வணிகத் தலத்தையும் குறிக்கும் சொல். மேற்குக் கடற்கரையிலும் சில பந்தர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பின்னர் பந்தர் என்பது பந்தர் உள்ள அவ்வூர்ப் பெயராகவும் மாறியது. (உருது, பர்சியன், அரபு மொழியில் பந்தர் என்ற சொல் உள்ளது) பதிற்றுப் பத்தில்

“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கவொரு பந்தர்ப் பெயரிய பேர்இசை மூதூர்

(67:1-2)

“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (74:5-6)

“இன்இசைப் புணரி இறங்கும் பௌத்து

நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்' (55: 3-4)

ஆகிய இடங்களில் ‘பந்தர்” என்ற சொல் குறிக்கப்படுகிறது. இரண்டு இடங்களில் கொடுமணல் மணிகளோடும் ஓரிடத்தில் பந்தரில் முத்துக்கள் கிடைப்பதையும் பதிற்றுப் பத்து கூறுகிறது. 'பந்தர்’பற்றி இதுவரை சரியான அடையாளத்தை யாரும் காட்டவில்லை. ஓர் இடப்பெயர் என்ற அளவிலேயே கருத்துக் கூறப்படுகிறது.

தமிழகம் வந்த சங்ககால யவனரில் அரபு நாட்டவரும் இருந்தனர். ‘யவனர்' என்ற சொல்லே பிற்காலத்தில் 'சோனகர்’ என்றாகி இஸ்லாமியரைக் குறித்தது என்று ஆய்வாளர் பலரும் கூறுவர். எனவே பதிற்றுப்பத்தில் வரும் ‘பந்தர்' என்ற சொல் அரபுச் சொல்லாக இருக்கக் கூடும்.

ஃபர்கானா என்ற சொல் நாகூர் வட்டாரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லும் அரபுச் சொல்லே.

யவனரான அராபியர் கடல்

ஆதிக்கம் செலுத்திய காரணத்தால்தான் “அரபிக்கடல்” என்ற பெயரே பெற்றது.

  • "தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்". தமிழ்ப் பல்கலைக் கழகம், செ. இராசு.