உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

193

13

நடக்கிற துருக்குகள் தெரியச் சொல்ல

திவான்சாய்பே நாமசேதிகள் எல்லாம் தெரியச்சொல்லி இதுயிதுவிபரமென்று அவர் இன்பமுடனே உரைக்கலுமே

லாலா சாத்துலகான்

நாளை காலமே பயணம் அறியுமென்றார்

சாத்தேரிக்கரைமேல் பெரியசெண்டாவும் அவருந்தான் போட்டார்

அன்று முகாமிருந்து மற்றாநாள்

ஆரணி யருகிலே போயிறங்கி

ஆரணி வெங்கிட ராவை அழைத்து

பொந்தியலவர் வந்து அன்று முகாமிருந்து

மற்றாநாள் போலூருறப் பட்டினில் போயிறங்கி

இரண்டுமூன்று நாளிருந்து கலசபாக்கம் தனியே

கணக்கவே நாலுமுகம் போயிறங்கி சிந்தாமல் சிதறாமல்

சிலுநாயக்கன் தெத்தடி செக்கினில் போயிறங்கி

அந்தரங்கமாகவே அவனுக்கு அந்தப்புறத்திலே ஆள்போகவிட்டு யெந்தவிதத்திலேயும் சிலுநாயக்கன் யெப்படி யாகிலும்

கைப்பிடியாய்க் கொண்டுவர வேணுமென்று

மனிதர் கொக்கரித்தே மலையேற லுற்றார்

அவனண்டையில் இருந்தவர்கள் நாங்கள்

பெண்டுகளே அல்லாமல் வேறொரு

மொண்டி சிலு நாயக்கனைக் காணோமென்றார்

அகப்பட்ட பேரையெல்லாம் நம்முட

ஆற்காட்டுக்கே கொண்டுபோ என்றார்

நகைத்துடன் சாத்துலகான் நல்லதென்று சம்மதித்து

திருவருணாமலைதனிலே தண்டு செயமாய்

வந்து யிறங்கியபின் மறுநா ளானபின்பு

வகையுள்ள றங்கப்ப செட்டியவாள் சேர்ந்தபின்

சிலுநாயக்கன் பெண்டுகள் சிக்கின பேறெல்லாரையும்தான்

கைகால் வாங்கச்சொல்லி அவர்களை

கணக்கவே அயிராணி பண்ணலுற்றனர்.

- முற்றுப்பெறவில்லை

  • தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண் டி. 3809 தொண்டை மண்டல வரலாறுகள், மேற்படி நூலக வெளியீடு.

பக்கம் 244-248