உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

முத்துச்சாமிபிள்ளை 2 பேரும் எழுதிக்கொடுத்த கறார் நாமா. என்னவென்றால் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த சாயவேர்களின் பிரத்யேகமாய்க் குத்தகை ஏற்பட்டிருக்கிற ஏர்வாடி கிராமம் மேல்பக்க எல்லைக்கும், மேல்பக்கமிருக்கிற பாலையார் முதல் வேம்பாத்து கீழ்ப்பக்கம் வரையிலும் அதற்குள்ளடங்கிய தீவுகளும் நீங்கலாக இத்துடன் சேர்ந்திருக்கிற நான்கெல்லை ஜாப்தாவில் அடங்கிய மேற்படி பாலையாத்துக்குக் கீழ்ப்பக்கம் முதல் இராமநாதபுரம் பாம்பன், முதுகுளத்தூர், திருவாடானை, சப் ரிஜிஸ்திராருக்குச் சேர்ந்த சாலைக்கரை வட்டகையென்று ஆத்தங்கரை, இராமேசுவரம். ஏர்வாடி, திருப்பாலைக்குடி, வகையறாவிலும் அதற்குள்ளடங்கின தீவுகளிலும் உண்டாகிய சாயவேர்களை இராமநாதபுரத்தில் உசூராபீசில் துரையவர்கள் முன்பாக நாளது மாதம் 21ஆம் தேதி இஸ்தியாரின் நிபந்தனையையும் உச்சரித்து யேலங் கூறினதில் கடோசியாக பசலி ஒன்றுக்கு ரூ 700/- இந்த ஏழுநூறு வீதம் 1290ஆம் பசலி முதல் 1294ஆம் பசலி வரை பசலி 5க்கு எங்களில் முத்துச்சாமி பிள்ளையாகிய நான் ஏலத்தில் ஒப்புக்கொண்டு அதற்காக 1 பசலி குத்தகைத் துகையில் கால்வாசி துகை ரூ 175/- தேதி 21ல் டேவணியாகச் செலுத்தியிருப்பதால் மேற்படி தீவு வகையறாக்களில் உண்டாகும் சாயவேர்களை நாங்களிருவரும் மேற்படி 1290ஆம் பசலி 1294 ஆம் பசலி வரை அனுபவித்துக் கொண்டு ஒவ்வொரு பசலிக்கும் ஏற்பட்டிருக்கும் மேல்கண்டத் குத்ததைகத் துகையை கிஸ்தி பந்திப் பிரகாரம் நாங்களிருவரும் செலுத்திவர வேண்டியது. டேவணித் துகையை கடோசிப் பசலி வாயிதாவுக்குச் செல் வைத்துக் கொள்ளவும். எந்தப் பசலியிலாவது கிஸ்தி வாயிதாப் பிரகாரம் பணம் செலுத்தத் தவறினால் தவறின தேதி முதல் மாதம் 1-க்கு 100க்கு ஒரு ரூபாய் வீதம் வட்டி சேர்த்திக் குடுக்கவும். அப்படியாவது பசலி வகையறாக்குள் அந்தந்தப் பசலி குத்தகைத்துகையைப் பூரா செலுத்தி விடாத அடுத்த பசலி குத்தகை பாத்தியதையும் டேவணியையும் இழந்து விடவும் மறு ஏலம் கூறினதில் நஷ்டம் சம்பவித்தால் அந்த நஷ்டத்திற்கு உத்திரவாதம் செய்யவும் அனுபவித்த பசலிகளுக்குள்ள குத்தகைத்துகையை நிலுவையிலிருந்தால் செல்லாகும் தேதி வரை வாயிதா தவறின தேதி முதல் மேல்கண்டபடி வட்டி சேர்த்துச் செலுத்தவும்