உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 199

99. கச்சத்தீவை குத்தகைக்கு வாங்கிய இஸ்லாமியர்கள்

பாக் ஜலசந்தியில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கட்குச் சொந்தமானதாகவும், இராமேசுவரம் நகரியத்திற்கு உட்பட்டு இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகவும் இருந்தது கச்சத்தீவு. இதற்கு ஏராளமான ஆவணச்சான்றுகள்

உள்ளன.

1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டது. இன்று கிழக்குக்கடற்கரை மீனவர்கட்கு ஏற்பட்ட வாழ்வுரிமைப் போராட்டங்களுக்குக் கச்சத்தீவு கைவிட்டுப் போனதே காரணம்.

கச்சத்தீவு, அதை ஒட்டிய சில தீவுகளிலும் சாயவேர் மிகுதியாக கிடைக்கும். பல இஸ்லாமிய பெருமக்கள் அதைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். தனியாகவும் கூட்டமாகவும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். பல ஆவணங்கள் இருப்பினும் கால எல்லையாக 1880, 1947ஆம் ஆண்டுகளில் எடுத்த குத்தகை நகல்கள் இங்கு அறியப்படுகின்றன. பத்திரம் முத்திரைத்தாளில் எழுதப் பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரம்

பதிவு எண் -510/80

2-7-1880

1 புத்தகம்-16ஆம் வால்யூம் -ரிஜிஸ்டர்

பத்திரத்திற்கு நகல்

(7ரூ முத்திரைத் தாளில் எழுதப்பட்டுள்ளது)

1880 ஆம் வருஷம் சூன் மாதம் 23ஆம் தேதி மதுரை டிஸ்டிரிக்கு ரிஜிஸ்தார் சரகத்து இராமநாதபுரம் சப் டிஸ்டிரிக்கு இலாக்கா இராமநாதபுரத்திலிருக்கும் மதுரை ஜில்லா ஸ்பெஷல் கலக்டர் எட்வர்டு டர்னர் துரையவர்களுக்கு மேற்படி இராமநாதபுரம் டிஸ்டிரிக்குச் சேர்ந்த கீழக்கரையிலிருக்கும் சோனக ஜாதி சாயபு மாப்பிள்ளை மரைக்காயர் குமாரர் வியாபாரமும் விவசாயமும் ஜீவனம் முகம்மது அப்துல் காதர் மரைக்காயர் 1 இராமாசாமிப்பிள்ளை மகன் விவசாய ஜீவனம்