உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

100. புதுக்கோட்டை ஓலை ஆவணங்கள்

சேது நாட்டு அரசர் கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதியிடம் பணியாற்றியவர் இரகுநாதத் தொண்டைமான். தொண்டைமான் சகோதரி காதலி நாச்சியாரைக் கிழவன் சேதுபதி திருமணம் செய்து கொண்டார். கிழவன் சேதுபதி தன் மைத்துனர் இரகுநாதத் தொண்டைமானை தனக்கும் சமமான அரசர் ஆக்க வேண்டும் என எண்ணித் தன் சேது நாட்டிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து புதுக்கோட்டை அரசென்று ஏற்படுத்தி 1686ல் திருமெய்யம் கோட்டையில் நடந்த விழாவில் இரகுநாதராயத் தொண்டை மானுக்குப் புதுக்கோட்டை அரசை அளித்தார்.

மற்ற பல சமஸ்தானங்கள் ஆங்கில இந்தியாவில் இணைந்த போதும் புதுக்கோட்டை மட்டும் தனியரசு செலுத்தும் மாநிலமாகவே இருந்தது. 1948ல்தான் இராஜகோபாலத் தொண்டைமான் இந்திய அரசோடு புதுக்கோட்டையை இணைத்தார். 19ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த இஸ்லாமிய பெருமக்கள் வணிகம், விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். புதுக்கோட்டை மாநில வளர்ச்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இப்போது தனி மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் பல ஓலை ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் இஸ்லாமியப் பெருமக்கள் தொடர்புடைய ஆவணங்களில் மூன்று இங்கு அளிக்கப்படுகின்றன.

இவைகளை அன்புடன் அளித்தவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமலை ராய சமுத்திரம் திருமலைநம்பி அவர்கள்.

19ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கை நிலை, சமயம், பொருளாதாரம், வணிகம், மற்ற மக்களோடு கொண்டிருந்த உறவு, பெயர் அமைப்பு இவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஆவணங்கள் ஓரளவு உதவும்.

நிலக் கிரயம் பத்திரம் (ஓலைச் சுவடி) கி.பி. 1878 முன்பக்கம்

1) 1878 ஜனவரி மாதம் 7 தேதிக்கு வெகுதான்ய வருஷம் மார்கழி 20 தேதிக்கு புதுக்கோட்டை சமஸ்தானம் சப்திரிக்