உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 205

கட்டைச் சேர்ந்த ஆலங்குடி தாலுகா கவிநாடு வட்டம் பொன்னம்பட்டியிலிருக்கும் பழனியாண்டி சேருவை காரன் மகன்

2) சாதி வலயன், சிவமதம் தொழில் குடித்தனம் செல்லப் பனுக்கு மேற்படி தாலுகா வட்டம் திருமலைராயசமுத்திரத் திலிருக்கும்... ராவுத்தன் மகன் சாதி துலுக்கன் மகமது தொழில் குடித்தனம் சின்னயராவுத்தன்

3) எழுதிக் கொடுத்த புஞ்சை நிலம் கிறைய சாதனம் யென்ன மெண்டால் குன்னாம் குளத்துக்கும் தொனபதி கொளத்துக்கும் வார வாரிக்கு மேற்கு பற செல்லன் பிரகார கொல்லைக்கு வடக்கு ஓட்டைக் குளத்துக்கு தண்ணீர் போற

4) வாரிக்குக் கிழக்கு... வீரப்பன் கொல்லைக்குத் தெற்கு யிந்த நான்கெல்லைக்கு உள்பட்ட புஞ்சை நிலம் தாக்கு... பதினாலு அடி (கோல்) 1059 குளி 6 நிலத்துக்கு விபரம்.. புஞ்சை நிலத்தை யென் தகப்பன்...

5) சித்திரை மாதம் 23 தேதி மேற்படி தாலுகா திருமலைராய சமுத்திரத்திலிருக்கும் கேப்பறைக்கி வீரப்பன் சேர்வை காரனிடத்தில் கிரையம் பெத்து அனுபவித்து வந்த பிஞ்சை கொல்லையை தன்னிடத்தில் நான் சுத்தக் கிரைய சாதனம்

6) செய்து குடுத்து நான் வாங்கினதுக்கு 1 விவரம் தான் தன்னிடத்தில் புஞ்சை கொல்லையை ஒத்தி வைத்து வாங்கியிருந்தது. நான் ரொக்கம் வாங்கினது ரூபாய் 24 ஆக... க்கி (50)ம் நான் பத்திக்

7) கொண்டது... யிப்போது... புஞ்சை நிலத்துக்கு ஏற்பட்டிருக்கிற பட்டா, சிட்டா கணக்குப்படி உள்ள கிஸ்தி பணத்தைத் தானகப்படிகொண்டு புத்திர பவுத்திர பாரம்பரியாய் தானதி விக்கிறய

பின்பக்கம்

1) ங்களுக்கு போக்கியமாய் ஆண்டு அனுபவித்து கொள்ளக் கடவீராகவும் புஞ்சை கொல்லைக்கு என் தொகப்பன் பேரால் பட்டா ஏற்பட்டு யிருப்பதை நான் தன்பேருக்கு ஆகும்படி

2) (சர்க்காரிலே) மனுக் கொடுத்து விடுவேனாகவும் யிந்தப்படி புஞ்சை நிலம் கிறைய சாதனம் செய்து கொடுத்தேன்.