உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை

புலவர் செ. இராசு 211

வீட்டுக்கு கிழக்கு, வடயெல்கை கடைத்தெருப் பாதைக்கு தெற்கு ஆகிய யின்னாங்கெல்கைக்

4. குள்ளிட்ட கூலபண்டகசாலையும் அதில் சேர்ந்த நிலமும் ராமீசுரத்தில் கொள்வாருளிரோ, கொள்வாருளிரோ வென்று நான்முற்கூற, தங்கள் பிற்கூறி கொள்வோமென்று வந்து இசைந்து எம்மிலிசைந்து தம்மில் பொருந்தி னால்வர்

5.

கூடி மூவர் உசாவி யிருவர் கொய்து பிடித்து ஒருவர் விலை நிள்ச்செயித்து அன்றாடகம் விளங்கும் பூவிராகன் 100... யிந்த நூறு பூவிராகனும் சுளி ஒரு பணமும் ரொக்கம் பத்திக் கொண்டதினாலே இதுவே அறுதி விலையாகவும் இதுவல் 6. லது வேறு விலைமாசி அல்லது பொருள்மாசி அல்ல பொருள் சிலவாவது யிதுவன்றியே ஒருக்காலாவ யிருக்காலாவது முக்காலாவது ஓலைக்குத்தம் யெளுத்துக்குத்தம் சொல்குத்தம் பொருள் குத்தம் வரிய்பிளை

7. வரிமாறாட்டம் வரி முடைந்தெளுதல் நெரிதல் வெட்டுச் செதுக்கு மற்று மேல் குத்தமும் குத்தமனாதியெளுதி சந்திராதித்த சந்ததிப் பிரவேச புத்திர பவுத்திர பரம்பரையாக கீள் நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் திட்டுத்திடல் யெப்பேர்ப்பட்ட சொல் பதார்த்தமு மீட்சியின்றியே ஆட்சியாக கல்லுங்காவேரியும் புல்லும் பூமியும் உள்ள நாள் வரைக்கும் அனுபவித்துக் கொள்ளக் கடவீர்களாகவும் இப்படிக்கு ஆளுமிடத்தில் தடையிடை

8.

9. வந்தால் நானே தடைதீர்த்துத் தருவேனாகவும் இப்படிக்கு சம்மதித்து ராமீசுரம் கூலப்பண்டகைசாலை அறுதிச் சாதனம் பணிக்குடுத்தேன் லெவ்வை மரக்காயரவர்களுக்கு முத்துச்சாமியாபிள்ளை ஒப்பம் இது காரியம் சாட்சி.

10. ஸ்ரீதர்ம மகாஜன நெயினாக்களில் சபாபதி நெயினார் மகன் சாமி நெயினார் முத்தணன் நெயினார் மகன் அய்யாக்குட்டி நெயினா கொத்துக்கணக்கு நல்லசிவம் பிள்ளை மேற்படி அனந்தப்பிள்ளை மீராலெவ்வை அம்பலம் மேற்படி அம்பலம் ராக்கப்பர் செட்டி