உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

உரிய

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

102. கூலப்பண்டகசாலை வாங்கிய லெப்பை மரக்காயர்

பாம்பன் முத்தய்யபிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளைக்கு

இராமேசுவரம்

கூலப்பண்டக

சாலையை

கீழக்கரையிலிருக்கும் இராமேசுவரம் மீரா லெப்பை அவர்கள் 100 பூவராகன் பணத்துக்கு 1818ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விலைக்கு வாங்கியதை இந்த முத்திரை ஓலைப்பட்டயம் கூறுகிறது.

கூலப்பண்டக சாலைக்கு (தானியம் விற்கும் கடை) நாற்புற எல்லைகள் கூறப்படுகின்றன. இடைக்காலத் தமிழகத்தில் விளங்கிய பண்டைய விற்பனை முறை பின்பற்றப்பட்டுள்ளது. விற்பவர் ஊர்ப்பொது இடத்தில் எல்லோரும் அறிய “விலைகொள்வார் உளரோ” என்று கூறவேண்டும். வாங்குபவர் விலை குறித்தால் கொள்வேன் என்று பிற்கூறவேண்டும். பின் விலை ஆவணம் எழுதப்படும்.

ஓலையில் உள்ள ஓலைக்குற்றம், எழுத்துக்குற்றம், சொல் குற்றம், பொருள் குற்றம், வரிப்பிழை, வரிமாறாட்டம், வரிமுடைத் தெழுதுதல், நெரிதல், வெட்டு, செதுக்கு முதலிய குற்றங்களைப் பொருட்படுத்தக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். முதீதணன் என்பவர் ஓலை எழுதியுள்ளார்.

ஓலை ஆவணம்

1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாந்தம் 1741 யிதன் மேல் 1818 டிசம்பர் மாதம்... தேதி வெகுதான்ய வருஷம் மார்களி மாதம் 3 தேதி செம்பி நாடு அனுத்துகைமங்கலம் நினைத்தது முடித்தான் பட்டினமாகிய கீழெக்கரையிலிருக்கும்

2. ராமீசுரம் லெவ்வை மரைக்காயரவர்களுக் பாம்பனி லிருக்கும் முத்தய்ய பிள்ளை மகன் முத்துச்சாமியா பிள்ளை ராமீசுரம் கூலப்பண்டகசாலை அறுதிவிலைச் சாதனம் பண்ணிக் குடுத்த பரிசாவது யித்தனாள் தங்களுக்கு விக்கின்ற ராமேசுரம் கூலப்பண்டகை சாலைக்கு

3. எல்கையாவது கிழக்கு எல்கை சரவணைப்பணிக்கன் வீட்டிற்கு மேற்கு, தென்னெல்கை பொன்னப்ப பிள்ளைவீட்டுக்கு, வடக்கு, மேல் எல்கை மீனாட்சி செட்டி