உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 209

101. பழவேற்காடு ஆவணத்தில் இஸ்லாமியர்

சென்னப்பட்டினம் (சென்னை) கிழக்கிந்திய கம்பெனி நடிவடிக்கைகளில் மிக முக்கியமான ஊர். இலங்கையிலிருந்து வந்த டச்சுக்காரர்கள் 1578லேயே அங்கு வந்து கோட்டை கட்டினார்கள். கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்றனர்.

பழவேற்காடு, இறுக்கந்தீவு, அவரிப்பாக்கம், கணவந்துறை, தாங்கல் பெரும்புலம் இந்த 5 கிராமங்களையும் ஆயிரம் வராகன் குத்தகைக்கு டச்சுக்காரர்கள் வாங்கினர். மக்கள் பலர் அங்கு குடியேறினர். சிலகாலம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் பழவேற்காட்டைக் கைப்பற்றித் தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.

அந்த ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும், உள்ள மக்களையும் கணக்கெடுத்து 1816ஆம் வருடம் ஆவணம் எழுதப்பட்டது. இஸ்லாமியர் பற்றிய குறிப்பும் உள்ளது. பெரும்பாலும் மீன்பிடி தொழில் நடைபெற்றது.

ஆவணப்பகுதி

பளவற்காடு

வீட்டுக் கணக்கும் செனக் கணக்கும்

19. சோனகர் வீடு 100 க்கு

ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 600

இடமணி

9. இடமணி துலுக்கர் வீடு 2 க்கு

ஆண் பெண் பசகள் உள்படச் செனம் 12

காட்டாங்குப்பம்

2. மீன் லாபக்காரர் சோனகர் குடிசை 1 க்கு

லாபக்காரர் துலுக்கர் குடிசை 1 க்கு

தீவுக்குப்பம்

6. லாபக்காரர் சோனகர் குடிசை 5க்கு செனம் 20

லாபக்காரர் - மீனவரிடம் மீனவரிடம் மீன் கொள்முதல் செய்து லாபத்துக்கு விற்பவர்கள்.

66

'லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் முக்கால் வராகனாய்க் கொடுத்து விடுவார்கள். அவர்கள் கொண்டுபோய் சென்னப் பட்டணம் முதலான இடங்களில் வித்துக் கொள்ளுவார்கள் (ஆவணம்)