உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

& 213

103. ஜம்பை காசிம் புலவர் பாடல்கள்

(அ) நூல் அச்சிட உதவி வேண்டல்

‘அரிச்சந்திர நாடகம்' என்ற இசைக் கீர்த்தனை நூலை ஜம்பை காசிம் புலவர் இயற்றினார். தன்னைப் பற்றியும், அந்நூல் பாடிய காரணம் பற்றியும் அந்நூலின் சிறப்பு பற்றியும் கூறி அச்சிட உதவி வேண்டிப் பாடிய 24 சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தப் பாடல். இவர் 'திருநீலகண்டர் நாடகம்' என்ற இசைக் கீர்த்தனை நூலையும் பாடியுள்ளார். (இரண்டும் கிடைத்துள்ளன.)

திருமிகும் ஐம்பைநகர் மீதுகுடி கொண்டுவளர் திகழும்இஸ் லாம்குலத்தில்

திண்புய முகமது கனிபுதல்வன் உபயவிழி தெரியாத மந்தகாசன்

திசைபுகழும் காசிம் எனப்பெயர் கொண்டு திட்டமுட னே அழைப்பர்

தெளிவுதரு காரிகை நிகண்டுநன் னூலுடன் செப்பும் அக ராதி முதலாய்

அருமையுடன் வாசிக்க வில்லைஎளி யேன்உலகில் ஆ சான்களைப் போற்றியான்

அம்புவியில் செந்தமிழ்ப் பண்டிதர்க ளைத்துதித்து அஞ்சிமுதி யோர்களுக்கில்

அடியேன் நமஸ்கரித்து உளமகிழ வேண்டினன்

அறிவில் சிறந்த இந்த

அரிச்சந்திர நாடகம் வெவ்வேறு மெட்டுகளில்

அமைத்திசைத்துக் கொடும்என

பெருமையுடை நகரநகர் செங்குந்த குலதிலகன் பெயர்கொண்ட குப்பமுத்துப்

பெற்றசுதன் ஆறுமுக முதலியெனும் சூரி

பிச்சநா யகன்இவர்கள்

பெட்புடன் கேட்கவே சந்தோஷ முற்றுயான்

பேதமிலா மல்இதனைப்

பிஞ்ஞகன் கிருபையால் பாடினேன் இவைகளில் பிழையிருந் தால்பொறுக்கவும்

தருமநெறி வழுவாத மண்டலத் தோர்களே

தயவுசெய்து இந்தவேளை