உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

தண்டமிழ் வித்துவான்கள் சொற்குற்றம் மன்னித்து

தமியனைக் காக்கவேணும்

தக்கபுகழ் பெற்றதன வான்கள்இசை அச்சிடத் தனம்உதவி செயவேண்டினன்

தம்மனம் களிகூர்ந்து கிருபையோ டளித்துபதில் தழைத்தோங்கி வாழ்க மாதோ!

(ஆ) நாகூர் வழிநடைச்சிந்து

ஜம்பை காசிம் புலவர் கண்பார்வையற்றவர். "நாகூர் வழிநடைச் சிந்து" என்ற நூல் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல் (முழுப்பகுதி கிடைக்கவில்லை) ஜம்பை முதல் நாகூர் வரை உள்ள பல பள்ளிவாசல், தர்காபற்றிய வருணனை உள்ளது என்பர்.

அக்கன்அருள் பெற்றஸ்தலம் பாரும்

அகமதுஅலி வாழும்

மக்கமாநகர் முகமதுபேரர்

மிக்கசீர் நாகூர் பதிகொண்ட தீரர்

திக்கெலாம்புகழ் ஜயம்பெறு வீரர்

எக்காலமும் திருக்காரணநாதர் (அக்கன்)

(இ) குடியின் தீமை

ஒருமுறை புலவர் எடப்பாடி சென்றார். அங்கு குடிகாரர்கள் இருந்தைப் பார்த்து அவர்கள் செயலைப் பற்றி பாடினார்.

“மங்கலம் மிகுந்த புவியில் - குடியர்கள்

-

மாடுபோல் உழைத்துவெகு பாடுபட்டுத்தான் செங்கையில் பணத்தைவாங்கி - வீட்டில்

செலவுக்குக் கொடுக்காமல் தாட்டிகமாய்

ஒண்டிக்கொண்டு கடையில்சென்றே - காடிபோல்

புளித்தகள் ளைக்குடித்து நெளிந்துகொண்டே சிங்கக்குட்டி போலே கர்ஜித்து – வானர

சேஷ்டைகள் செய்துவெகு மோசங்கள் செய்து

பெண்டுபிள்ளை அலையவிட்டு”

என்பது அப்பாடலில் ஒரு பகுதியாகும்.

(ஈ) யூசுப் சாகிப் பெயர்

ஜம்பை பெரியவர் பாகவி முகம்மது யூசுப் சாகிப் அவர்களின் பெயர்பற்றி காசிம் புலவர் பாடிய பாடல்