உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

215

மறிக்கரியே ரோசையிடும் குழலின் பேரு

மண்ணாலே செய்யாத குடத்தின் பேரு தரணியெங்கும் புகழும்ஒரு ஒலியின் பேரு

தமிழர்தொழும் குருப்பெயரோன் செடியின் பேரு அறிவுடையோர் இந்தவகை ஆறும் கூட்டி

அன்புடனே நடுஎழுத்தைப் படித்துப் பார்த்தால் இறைவனைத் தொழும்ஜம்பை நகரில் வாழும் யூசுப்சாகிப் என்று இயம்ப லாமே!

என்பது அப்பாடலாகும்.

(உ) பவானியாற்றுப் பெருவெள்ளம்

4.7.1901 அன்று பவானியாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் பற்றி“பெருவெள்ள தங்கச் சிந்து”, “பெருவெள்ள நொண்டிச்சிந்து” என்ற இரு பாடல் தொகுதிகளைப் பாடியுள்ளார் சம்பை புலவர் அ. பழனியப்பபன் மூலமாகக் கிடைத்த அக்கையெழுத்து பிரதியை புலவர் செ. இராசு அவர்கள் மூலமாக அச்சிட்டு 22, 2; 24-12-2002ல் கொழும்பு நகரில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் நேரில் சென்று பேராளர், பார்வையாளர்கட்கு ஈரோடு செவாலியர் டாக்டர் கொங்கு. என். கொளந்தசாமி அவர்கள் வழங்கினார்கள்.

“சீர்பெருகும் பிலவஆண்டு மிதுனத் திங்கள் செப்பரிய தேதியது இருபத் தொன்றில் பேர்பெருகும் புதன்கிழமை பவானி யாற்றில் பெருக்கெடுத்து நதிக்கடுத்த ஊர்கள்தோறும் நேர்பெருகும் கழனிகளும் வாழை செந்நெல் நிர்த்தூளி ஆக்கிமிகச் சூறை யாடிப் பார்புகழும் கனவான்கள் எளியோர் எல்லாம்

பரிதவித்த சரித்திரத்தைப் பகருவோமே

என்பது அவர் பாடிய தங்கச் சிந்தின் முதல் பாடலாகும். பெருவெள்ளம் பற்றிய முழுமையான முதல் தமிழ் இலக்கியம் இதுவேயாகும். காசிம் புலவர் கண்பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உதவி புலவர் அ. பழனியப்பன், ஜம்பை.